News April 29, 2024
100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

அந்தியூர் அருகே வரட்டு பள்ளம் சோதனை சாவடி அருகே கர்நாடகா மாநிலம் ராமாபுரம் சாம்ராஜ் நகர் பகுதியில் இருந்து சோயா பீன்ஸ் ஏற்றி வந்த லாரி இன்று மதியம் எதிர்பாராத விதமாக 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பர்கூர் போலீசார் படுகாயமடைந்த லாரி டிரைவர் அபிமன்னனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News October 20, 2025
ஈரோட்டில் நிலம் வாங்க போறிங்களா?

1.நிலம் வாங்கும் முன், அது பட்டா நிலமா (அ) புறம்போக்கு நிலமா என அறிய வேண்டும்., 2.அதன் விலை நிலவரம் மற்றும் கோயில் நிலமா என்பதை விஏஓ மூலம் உறுதி செய்ய வேண்டும், 3.மேலும், பழைய/தற்போதைய உரிமையாளர்கள், தாய் பத்திரம், கடன் போன்ற ஆவணங்களைச் சரிபார்ப்பது அவசியம், 4.பட்டாவுடன் ஆதார் இணைக்க, <
News October 20, 2025
ஈரோடு: 7 கிராமங்களின் விநோத கொண்டாட்டம்!

ஈரோடு அருகே உள்ள வெள்ளோடு மக்கள் பட்டாசுகளே இல்லாமல் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.அங்குள்ள பறவைகள் சரணாலயத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தில், உள்நாட்டுப் பறவைகள் மட்டுமின்றி, சைபீரியா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து செல்கின்றன. இதன் காரணமாக வெள்ளோட்டைச் சுற்றியுள்ள 6 கிராமங்களில் 19 ஆண்டுகளாக பட்டாசுச் சத்தம் கேட்பதில்லை
News October 19, 2025
ஈரோடு: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை.நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 மற்றும் 1912 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.