News March 23, 2024
100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் நேற்று அங்கன்வாடி பணியாளர்கள், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அகல் விளக்கு ஏற்றி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். இதில் அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News April 10, 2025
கள்ளக்குறிச்சியில் வேலை தேடுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கள்ளக்குறிச்சியில் 138 அங்கன்வாடி பணியாளர்கள், 14 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 133 அங்கன்வாடி உதவியாளர் உள்ளிட்ட 285 பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளதாகவும், விண்ணப்பிக்க ஏப்ரல் 23-ஆம் தேதி கடைசி நாள் என்றும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார். இந்த பணிகளுக்கு விண்ணப்பங்களை இந்த லிங்கை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்
News April 10, 2025
ராணுவத்தில் வேலை: இன்றே கடைசி நாள்

அக்னிவீர் திட்டத்தின் கீழ், ராணுவத்தில் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட 25,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழிலும் தேர்வு எழுதலாம். 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றைக்குள் <
News April 10, 2025
பூச்சிக்கொல்லி மருந்து குடித்து பெண் தற்கொலை

சங்கராபுரம் அடுத்த வாணியந்தலை சேர்ந்தவர் அன்பரசன். மனைவி சத்யா(26) இருவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், 3 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுவந்தது. சத்யா தனது குழந்தைகளுடன், பானையங்காலில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில், நேற்று பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் விசாரிக்கின்றனர்.