News April 15, 2024
100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பார்வையற்றோர், காதுகேளாதோர் நல சங்கம் சார்பாக, அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு இன்று நடைபெற்றது. இதையடுத்து பிரெய்லி முறையில் பேலட் தாள்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம், வரிசை எண் அச்சடிக்கப்பட்ட விவரங்களை வாசித்து காட்டும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சரயு இன்று துவக்கி வைத்தார்.
Similar News
News November 17, 2025
கிருஷ்ணகிரி: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

தேன்கனிக்கோட்டை அருகே சின்னதோகரை பகுதியை சேர்ந்த மது (29) என்ற கூலித்தொழிலாளிக்கு, மது அருந்தும் இருந்துள்ளது. இதனால் அடிக்கடி மனைவியிடன் தகராறு நடந்து வந்தது, இதன் காரணமாக மனைவி தந்து தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் மனமுடைந்து மது வீட்டில் தூக்கிட்டு நேற்று (நவ.16) தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 17, 2025
கிருஷ்ணகிரி: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்!

கிருஷ்ணகிரி: இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே<
News November 17, 2025
கிருஷ்ணகிரி: சிறுவன் உட்பட 4 பேர் மீது வழக்கு

ஒசூர் அருகே தொரப்பள்ளி அக்ரஹாரத்தைச் சேர்ந்த வெங்கட்ராஜ் ஆகஸ்ட் மாதம் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஜாமீனில் வெளியே வந்தவர் மஞ்சுநாத். மஞ்சுநாத் நடந்து சென்றபோது, அவரைப் பழிவாங்கும் நோக்குடன் கார் ஏற்றி கொலை செய்ய முயற்சித்தது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக, சிறுவன் ஒருவன் உட்பட 4 பேரை ஒசூர் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.


