News April 12, 2024

100 கி.மீ நடைபயணம்: குடை பிடித்த ஆட்சியர்

image

2024 மக்களவை தேர்தலையொட்டி தேனி மாவட்டம் முழுவதும் ஆட்சியர் ஷஜீவனா மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில்,  100கி.மீ. நடைபயணத்தின்  6-ம் நாளான
இன்று (12.04.2024) தேர்தல் விழிப்புணர்வு வாசகத்துடன் குடையினை பிடித்தபடி ஆட்சியர் விழிப்புணர்வு செய்தார்.  இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி உள்ளிட்ட பலர் இருந்தனர். 

Similar News

News November 20, 2024

தேனியில் நவ.23ம் தேதி கிராமசபை கூட்டங்கள் – ஆட்சியர் 

image

தேனி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் வருகிற 23ஆம் தேதி நடக்கிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். அன்று நடைபெற இருந்த கிராம சபைக்கூட்டமானது, நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. மேற்படி ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டமானது அன்று முற்பகல் 11.00 மணியளவில் ஊராட்சி மன்றத்தலைவர்களால் நடத்தப்படுகிறது என்றார்.

News November 20, 2024

தேனியில் மாதாந்திர உதவித்தொகை வழங்கும் முகாம்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ், 18 வயதுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு தளர்த்தி மாதாந்திர உதவித்தொகை வழங்கும் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் சுயமாகவும், தன்னிச்சையாகவும் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக முதல்வர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என்றார்.

News November 20, 2024

சபரிமலையில் 5 நாட்களில் 3 லட்சம் பக்தர்கள் தரிசனம்

image

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டு 5 நாட்களில் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் 3 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளனர். பெரிய பாதை வழியாக நடைபயணமாக 28 ஆயிரத்து 300 பேர் சபரிமலையில் தரிசனம் செய்து உள்ளனர். புல்மேடு வழியாக 106 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். வெளி மாவட்டத்தில் இருந்து வரும் பக்தர்கள் வருகை தர தொடங்கினர்.