News March 4, 2025
100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு

பர்கூர் அருகே காரகுப்பம் தனியார் மண்டபத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக, 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார், பர்கூர் எம்.எல்.ஏ. தே.மதியழகன் ஆகியோர், கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். பின்னர், கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர் வரிசைப் பொருட்களை வழங்கினர்.
Similar News
News January 9, 2026
கிருஷ்ணகிரி வாக்காளர்கள் கவனத்திற்கு…

கிருஷ்ணகிரி மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
News January 9, 2026
புதிய தொழிற்பள்ளிகள் துவங்க அழைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2026-27 கல்வியாண்டில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க விரும்புவோர் பிப்ரவரி 28-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அங்கீகாரம் புதுப்பித்தல் மற்றும் கூடுதல் இடங்களுக்கும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் www.skilltraining.tn.gov.in இணையதளத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
News January 9, 2026
கிருஷ்ணகிரி பெண் குழந்தைக்கு ரூ.50,000-/

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் <


