News November 24, 2024
100 இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்க திமுக ஏற்பாடு

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நாமக்கல் எம்பி ராஜேஷ்குமார் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, வரும் புதன்கிழமை (நவ.27) நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் 100 இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Similar News
News November 4, 2025
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு !

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (03.11.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 3, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை !

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று ( நவம்பர் . 3) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை ( நவம்பர் . 4) முதல் முட்டையின் விலை ரூ.5.40 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
News November 3, 2025
நாமக்கல்: கோயில்களில் பிரச்சனையா? இதை பண்ணுங்க!

தமிழகத்தில் பல்வேறு கோயில்களை தமிழ்நாடு அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது. இக்கோயில்களில் சாமி தரிசன கட்டண வசூல், அன்னதானம், பராமரிப்பு குறைபாடு, தாய்மார்கள் பாலூட்டும் அறை, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை தேவை குறித்த புகார் மற்றும் கோரிக்கையை<


