News March 29, 2024

10 நிமிடத்திற்கு ரூ.2,400 கட்டணம்

image

செய்யூர் அருகே முதலியார்குப்பம் கிராமத்தில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும் ‘ரெயின் ட்ராப் போட் ஹவுஸ்’ உள்ளது.கோடை விடுமுறை துவங்கப்பட உள்ளதால், சுற்றுலா பயணியரை கவரும் விதமாக, புதிய ‘டிஸ்கோ’ போட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
நான்கு பேர் அமரும் இருக்கைகள் கொண்ட ‘டிஸ்கோ’ போட்டில் சவாரி செய்ய, 10 நிமிடத்திற்கு ரூ.2,400 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Similar News

News April 21, 2025

மாணவிக்கு கருக்கலைப்பு: பேராசிரியர் கைது

image

வண்டலூர் அருகே இயங்கி வரும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைகழக மாணவியை கர்ப்பமாக்கி, கருக்கலைப்பு செய்த உதவிய பேராசிரியர் ராஜேஷ்குமாரை (45) போலீசார் கைது செய்தனர். இவருக்கு கடந்த மாதம்தான் திருமணம் நடைபெற்றது. கருக்கலைப்பின்போது மாணவிக்கு ரத்தப்போக்கு அதிகமானதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 20, 2025

ஏ.சி., ரயில் பொது மக்களிடம் கருத்து கேட்பு

image

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே முதல் குளிர்சாதன மின்சார சேவை நேற்று முதல் பயணிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. நாளொன்றுக்கு மொத்தமாக 6 சேவைகள் இயக்கப்பட்டு வரும் இந்த ரயில், தற்போது எந்தெந்த நேரங்களில் இந்த ரயிலை இயக்கலாம் என்று பொதுமக்களிடம் கருத்து கேட்கும் முயற்சியில் தெற்கு ரயில்வே ஈடுபட்டுள்ளது. அதற்காக வாட்ஸ் அப் எண்ணையும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது (6374713251) ஷேர் பண்ணுங்க

News April 20, 2025

செங்கல்பட்டு மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

image

▶️வட்டாட்சியர் அலுவலகம், மதுராந்தகம் – 9445000503
▶️வட்டாட்சியர் அலுவலகம், செய்யூர் – 9445000504
▶️வட்டாட்சியர் அலுவலகம், தாம்பரம் – 9445000502
▶️வட்டாட்சியர், திருக்கழுகுன்றம் – 9445000501
▶️வட்டாட்சியர், பல்லாவரம் – 9384094644
▶️வட்டாட்சியர், செங்கல்பட்டு – 9445000500
▶️தாசில்தார், வண்டலூர் – 9790435375
SHARE பண்ணுங்க மக்களே

error: Content is protected !!