News April 8, 2025
தம்பியின் கண்முன்னே 10 வயது சிறுமி தற்கொலை!

தாய் திட்டியதற்காக 10 வயது சிறுமி, தம்பியின் கண்முன்னே தற்கொலை செய்து கொண்ட அவலம் அரங்கேறியுள்ளது. சென்னையை சேர்ந்த கெளசல்யா கூலி வேலைக்கு சென்ற நிலையில், தனது மகளிடம் வீட்டு வேலையை செய்யக் கூறியுள்ளார். ஆனால், அதனை செய்யாமல் சிறுமி, விளையாடிக் கொண்டிருந்ததை தாய் கண்டித்துள்ளார். இதனால், மன உளைச்சலிலிருந்த ரோஷினி (10) தனது 5 வயது தம்பியின் கண்முன்னே உயிரை மாய்த்துக்கொண்டார். பெரும் சோகம்..!
Similar News
News April 8, 2025
ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு இன்று (ஏப்.8) ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் கோபால் சுன்காரா உத்தரவிட்டுள்ளார். இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இன்று இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 26ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க..
News April 8, 2025
வருண் குமார் வழக்கு… சீமானுக்கு பிடிவாரண்ட்?

டிஐஜி வருண் குமார் தாக்கல் செய்த வழக்கு நேற்று திருச்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால் சம்மன் கொடுக்கப்பட்ட சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. சீமான் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக அனுமதியளிக்க அவரது வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். அதனை ஏற்ற நீதிபதி, சீமான் இன்று காலை 10:30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
News April 8, 2025
ISL இறுதி போட்டியில் மோகன் பகான்

11வது ISL இறுதி போட்டிக்கு மோகன் பகான் அணி முன்னேறியது. 2-வது அரையிறுதியின் 2-வது சுற்றில் முன்னாள் சாம்பியன் மோகன் பகான் – ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின. இதில் மோகன் பகான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை தோற்கடித்தது. முதலாவது சுற்றில் ஜாம்ஷெட்பூர் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது. இரு ஆட்டங்களின் கோல்களின்(3-2) அடிப்படையில் மோகன் பகான் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.