News March 18, 2024

புதுக்கோட்டை அருகே 10 பேர் சிக்கினர் 

image

வடகாடு அருகே வாணக்கன்காடு முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல்விழா நேற்று நடைபெற்றது. விழாவில் போலீசார் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விட்டதாக, கருக்காகுறிச்சி பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன், ராஜேஷ், ராம்குமார்,அஜித், ஷீதரன் , வீரையா,குணா, பாலு, பாஸ்கர், தியாகராஜ் ஆகிய 10 பேர் மீது வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 21, 2026

புதுக்கோட்டை: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News January 21, 2026

புதுகை: சிறுவன் தீக்குளித்து உயிரிழப்பு

image

மீமிசல் அடுத்த கொளந்திரத்தைச் சேர்ந்தவர் பிரனீத் (13). இவர் 7ம் வகுப்பு படித்து வந்த நிலையில், படிப்பின் மீது ஆர்வமின்மையால் நேற்று கொளந்திரத்தில் உள்ள அவரது இல்லத்தில் தீக்குளித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார். தற்போது, இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 21, 2026

புதுக்கோட்டை: 110 கிலோ கஞ்சா பறிமுதல்!

image

மணமேல்குடி பகுதியில் கடலோர பாதுகாப்பு குழு போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்தோணியார் புரத்தில் உள்ள நாட்டுப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சாவை கடத்த முயன்றதை கண்டறிந்தனர். இதனை அடுத்து கஞ்சாவை கடத்த முயன்ற ஆரோக்கிய ராகுல் (35), சிவசங்கர் (31) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 110 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!