News May 24, 2024
10 அமைச்சர்கள் இலாகா மாற்றம்?

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வந்ததும், அமைச்சரவையை மாற்றியமைக்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாகத் தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில், தற்போது தேர்தலில் கடமைக்கு பணியாற்றியவர்கள், சரிவர செயல்படாத அமைச்சர்கள் என 10 பேர் பட்டியலை தயாரித்துள்ளதாகவும், அவர்களின் இலாகாவை மாற்ற முதல்வர் திட்டமிட்டிருப்பதாகவும் புதுத் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News March 22, 2026
பெண்கள் Safety-க்காக போனில் இத பண்ணுங்க!

➤Phone Settings-க்கு சென்று, Emergency SOS என தேடி அதை ON செய்யுங்கள் ➤நம்பகமானவர் (உறவினர்/நண்பர்) Contact-ஐ அதில் உள்ளிடுங்கள் ➤நீங்கள் ஏதேனும் பிரச்னையில் சிக்கும்போது Power button-ஐ 3 முறை அழுத்தினாலே போதும். உங்களுடைய Live Location போலீசுக்கும், உறவினருக்கும் சென்றுவிடும். பெண்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பை மேம்படுத்த இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News March 22, 2026
அதிமுக பேச்சாளர்களுக்கு செலவுத் தொகை மறுப்பா?

தேர்தல் பிரசாரங்களின்போது ஒவ்வொரு கட்சியிலும் நட்சத்திர பேச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். அவர்களுக்கு கட்சித் தலைமை & வேட்பாளர்கள் குறிப்பிட்ட தொகையை பிரசார செலவாக கொடுப்பதுண்டு. இந்நிலையில், அதிமுக நட்சத்திர பேச்சாளர்களுக்கு கட்சித் தலைமை சார்பில் செலவுத்தொகை தரப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாம். வேட்பாளர்களிடமே செலவினத்தை பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனராம்.
News March 22, 2026
கொரோனாவை ஒழிக்க முதல் லாக்டவுன் வந்த நாள்!

கொரோனா வைரஸை தடுக்க நாடு முழுவதும் 14 மணி நேர லாக்டவுன் அறிவிக்கப்பட்ட தினமான 2020 மார்ச் 22-ம் தேதியை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. பின்னர், மார்ச் 25-ம் தேதி முதல் 21 நாள்கள் என தொடங்கிய முதற் கட்ட லாக்டவுன் பின்னர், பல கட்டங்களாக நீடித்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் 5,33,847 பேர் உயிரை காவு வாங்கியதோடு, பல கோடி பேரின் வாழ்வாதாரத்தையும் சீரழித்தது. லாக்டவுனில் உங்கள் நினைவு என்ன?


