News April 30, 2024
ஓலாவில் 10% ஊழியர்கள் பணி நீக்கம்?

முன்னணி கார் டாக்ஸி நிறுவனமான ஓலா கேப்ஸ், அதன் 10% ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 200 பேர் வேலை இழப்பார்கள் எனத் தெரிகிறது. இது குறித்து விளக்கமளித்த அந்நிறுவனம், திறனை மேம்படுத்த மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், தேவையற்ற பணிகளை நீக்கி, புதிய பணிகளை உருவாக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
Similar News
News September 20, 2025
சத்தான காலை உணவுகள்

காலை உணவு, நாள் முழுவதும் அதிகப்படியாக சாப்பிடுவதைத் தடுத்து, சீரான உடல் எடையைப் பராமரிக்க உதவும். காலை உணவைத் தவிர்ப்பதால், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைபாடு ஏற்படலாம். மேலே, சில சத்தான காலை உணவுகள் போட்டோக்களாக உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. நீங்கள் காலை என்ன சாப்பிடுறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.
News September 20, 2025
தங்கம் விலை 2 மடங்காக அதிகரிக்கும்

கடந்த மூன்று நாள்களாக குறைந்து கொண்டே வந்த ஆபரணத் தங்கம் விலை நேற்று மீண்டும் அதிகரித்தது. இந்நிலையில், தற்போது 3,700 டாலராக இருக்கும் ஒரு அவுன்ஸ் தங்கம் 2 மடங்காக அதிகரிக்கும் என்று ஜெஃப்ரிஸ் என்ற அமெரிக்கா நிறுவனம் கணித்துள்ளது. அதாவது, சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 6,600 டாலர்களாக உயரக்கூடும் என தெரிவித்துள்ளது. இதனால், தங்கம் விலை இனி ஏற்றத்துடனே இருக்கும் என கூறப்படுகிறது.
News September 20, 2025
நயினார் மீது பாஜகவினர் அதிருப்தி?

பாஜகவில் மகன் பாலாஜிக்கு விளையாட்டு & திறன் மேம்பாட்டு அமைப்பாளர் பதவி வழங்கினார் நயினார். இதனால் வாரிசு அரசியலை எதிர்க்கும் பாஜகவினர் அதிருப்தியடைந்தனர். இந்நிலையில், அடுத்த தலைவர் நான் தான் என்பதுபோல கறார் காட்டி வருகிறாராம் பாலாஜி. இதனால் கடுப்பான பாஜகவினர் நயினாரிடம் புகாரளிக்க, அவர் புகாரளிப்பவர்களையே கண்டிப்பதாக கூறப்படுகிறது. டெல்லி தலைமைக்கு இதுபற்றி ரிப்போர்ட் பறக்குமா?