News January 2, 2025
இஸ்ரேல் தாக்குதலில் 10 பேர் பலி!

ஹமாஸ் படையினருக்கு எதிராக, கடந்த ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பாலஸ்தீனம் உருக்குலைந்து போயுள்ளது. இதில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். இந்த சூழலில், வீடு மற்றும் உறவுகளை இழந்தவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த முவாசி பகுதியில் இஸ்ரேல் இன்று அதிகாலை பயங்கர வான் தாக்குதலை நடத்தியது. இதில் 3 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Similar News
News January 14, 2026
தருமபுரி மக்களே லஞ்சம் கேட்டால் உடனே CALL!

தருமபுரி மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். இந்த தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04342-260042) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News January 14, 2026
வெள்ளி விலை மேலும் அதிகரிக்கும்

தற்போது ஒரு அவுன்ஸ் (28.3 கிராம்) ஒன்றுக்கு $94-$95 ஆக இருக்கும் வெள்ளி, இந்த மாதம் $100 ஐ எட்டக்கூடும் என்று சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தக் கணக்கீட்டின் அடிப்படையில் அடுத்த 7 நாள்களில் வெள்ளி விலை அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் முடிவுகள், டிரம்பின் உத்தரவுகள், ஈரான் பதட்டங்கள் உள்ளிட்ட காரணிகளால் வெள்ளி விலை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
News January 14, 2026
பொங்கல் வைக்க இதுதான் நல்ல நேரம்

சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் பயணிக்க தொடங்குவதையே தை மாதப் பிறப்பு என்கிறோம். சூரிய பொங்கல் வைக்கும் வழக்கம் உள்ளவர்கள் காலை 6 மணிக்கு சூரிய உதயத்திற்கு முன் பொங்கல் வைத்து வழிபட வேண்டும். மற்றவர்கள், காலை 7. 45 மணி முதல் 8. 45 மணி வரையும், 10.35 முதல் பகல் 1 மணி வரையும் பொங்கல் வைத்து வழிபடலாம். இந்த பயனுள்ள பதிவை அனைவருக்கும் பகிரவும். ஹேப்பி பொங்கலோ பொங்கல்!


