News August 18, 2024

பேருந்து – டெம்போ மோதி 10 பேர் பலி

image

உ.பி புலந்த்சாகர் மாவட்டம் அருகே பேருந்தும், டெம்போ வேனும் மோதிய விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், வேனில் பயணித்தவர்கள் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்பதும், ரக்ஷா பந்தன் பண்டிகையை கொண்டாட அவர்கள் சொந்த ஊர் திரும்பிய சிறிது நேரத்தில் இந்த துயரம் நடந்ததும் தெரியவந்துள்ளது.

Similar News

News August 9, 2025

SSMB29.. இயக்குநர் ராஜமெளலி கொடுத்த மெகா அப்டேட்!

image

இன்று மகேஷ் பாபு பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் பட அப்டேட் வரும் என எதிர்பார்த்த ரசிகர்களை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி ஏமாற்றியுள்ளார். இன்று எந்த வித அப்டேட்டும் வராது என தெளிவாக குறிப்பிட்ட அவர், வரும் நவம்பரில் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என X தளத்தில் போஸ்டர் ஒன்றுடன் தெரிவித்துள்ளார். அதில், மகேஷ் பாபு கழுத்தில் உள்ள செயினில் சிவனின் திரிசூலம், உடுக்கை, காளை ஆகியவை இருக்கின்றன.

News August 9, 2025

2 இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால்..

image

உங்கள் ஊரை விட்டு வெளியூரில் செட்டிலான பிறகு, அங்கே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தால் மட்டும் போதாது. பழைய ஊரின் பட்டியலில் இருந்து பெயரை நீக்குவதும் அவசியம். பெயரை நீக்க, எலெக்‌ஷன் கமிஷனின் Form 7 மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இது உங்கள் பெயரில் போலியாக வாக்கு பதிவாகுவதை தடுக்கும். வாக்காளர் பட்டியலில் ஏற்படும் குளறுபடிகளை தீர்ப்பது மக்களின் கடமையும் கூட. SHARE IT.

News August 9, 2025

Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்..

image

காலை 11:30 மணிக்கு கேட்கப்பட்ட <<17349992>>கேள்விகளுக்கான <<>>பதில்கள்: கேள்விகளுக்கு இங்கே கிளிக் பண்ணவும்.
1. சிக்கிம்
2. 2.5- 4.0 வரை (Acid pH)
3. 1955
4. அழ. வள்ளியப்பா
5. ‘ரவுண்டே கார்டன் காட்சி’- Roundhay Garden Scene! 1888 பிரெஞ்சு படம்(2.1 விநாடிகள்) நீங்க எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க?

error: Content is protected !!