News May 15, 2024
10 கிலோ அரிசி இலவசம்: கார்கே

I.N.D.I.A கூட்டணி ஆட்சியமைத்தால் ஏழைகளுக்கு 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். லக்னோ பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், இந்த வாக்குறுதியை வழங்கினார். ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ₹1 லட்சம் வழங்கப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி வாக்காளர்களை ஈர்த்துவரும் நிலையில், இலவச அரிசி வாக்குறுதியையும் காங்கிரஸ் அளித்துள்ளது.
Similar News
News March 17, 2026
கரூர்: அரசு சேவைகள் இனி உங்கள் whatsapp-ல்!

கரூர் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 17, 2026
ஸ்பீட் போஸ்ட்.. புதிய சேவைகள் அறிமுகம்

‘24 ஸ்பீட் போஸ்ட்’ மற்றும் ‘48 ஸ்பீட் போஸ்ட்’ என்ற புதிய சேவைகளை இந்தியா போஸ்ட் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி இன்று முதல் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் கிடைக்கும். தபால் / பொருட்கள் 24 மணி நேரம் & 48 மணி நேரத்துக்குள் உறுதியாக டெலிவரி செய்யப்படும் என்றும் இதில் தாமதம் ஏற்பட்டால் செலுத்தப்பட்ட பணம் திரும்ப வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
News March 17, 2026
வியாழக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை

லீவு என்றாலே பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சிதான். அந்த வகையில், இந்த வாரத்தில் 3 நாள்கள் விடுமுறையாகும். நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி அரசு விடுமுறையாகும். இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகை, ஞாயிற்றுக்கிழமை என அடுத்தடுத்து லீவுதான். 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு நெருங்கி வருவதால், விடுமுறையை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துங்கள் மாணவர்களே!


