News March 31, 2025
ஏப்ரலில் வங்கிகளுக்கு 10 நாள்கள் விடுமுறை

ஏப்ரலில் வங்கிகளுக்கு 10 நாள்கள் விடுமுறை. ஏப். 1 வருட கடைசி கணக்கு நிறைவு நாள் என்பதால் விடுமுறை. ஏப்.10 மகாவீர் ஜெயந்தி, ஏப். 14 தமிழ் புத்தாண்டு, ஏப். 18 புனித வெள்ளி ஆகும். இந்த நாட்களிலும், ஏப்ரல் 6, 12, 13, 20, 26, 27 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் வருவதால் அன்றைய நாள்களும் விடுமுறை ஆகும். இந்த 10 நாள்களும் வங்கிகள் திறந்திருக்காது. இதை வைத்து திட்டமிட்டு வங்கி செல்லுங்கள்.
Similar News
News April 2, 2025
எம்ஜிஆரே ஸ்டாலினிடம் தான் கேட்பார்: அமைச்சர்

எம்ஜிஆர் தனது படம் வெளியானதும், எப்படி இருக்கிறது என முதல்வர் ஸ்டாலினிடம் தான் கேட்பார் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். எம்ஜிஆரின் முதல் ரசிகன் ஸ்டாலின்தான் எனவும், காரில் பயணிக்கும் போதெல்லாம் அவரது பாடல்களையே முதல்வர் கேட்பார் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். மேலும், தமிழ் மொழியை காக்க போர் குரல் எழுப்பும் நமது முதல்வர் இரும்பு மனிதராக உள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
News April 2, 2025
உங்களுக்கு 40 வயது ஆகிறதா?

40 வயதானவர்களின் எலும்புகள் அடர்த்தியை இழந்து தேய்மானம் அடைகின்றன. எனவே முதுமை வரை வலிமையான எலும்பை பெற பால், தயிர், கீரைகள், பாதாம், மீன், முட்டை மஞ்சள் கருக்கள் என கால்சியம், வைட்டமின் டி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். நடைபயிற்சி, ரன்னிங் மேற்கொள்ளுங்கள். புரதம் நிறைந்த இறைச்சி, முட்டை, பீன்ஸ், பயறு மற்றும் நட்ஸ் வகைகளை உட்கொள்ளுங்கள். புகைப்பிடித்தல், மதுபழக்கத்தை கைவிடுங்கள்.
News April 2, 2025
பண்ட்டுக்கும் ராகுல் ட்ரீட்மெண்ட்

கடந்த ஐபிஎல் சீசனில் கே.எல்.ராகுலின் கேப்டன்ஸி சொதப்பியதால், LSG ஓனர் சஞ்சீவ் கோயங்கா அவருடன் பொதுவெளியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதேபோன்று, பஞ்சாப் அணியுடனான நேற்றைய போட்டியில் LSG தோற்றதால், அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டை, சஞ்சீவ் பொதுவெளியில் கடிந்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ரிஷப் பண்ட் ட்ரெண்டிங்கிலும் உள்ளார்.