News April 12, 2025
10 மசோதாக்கள் சட்டமானதாக அரசிதழில் வெளியீடு

உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து 10 மசோதாக்களும் சட்டமானதாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக CMஐ பல்கலை வேந்தராக்கும் மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் தராததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. விசாரித்த உச்ச நீதிமன்றம் தனி அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது. 2023 நவம்பர் 18ல் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்ததாக அரசிதழில் வெளியாகியுள்ளது.
Similar News
News December 6, 2025
இந்த வார ஓடிடி ட்ரீட்!

இந்த வாரம் ரசிகர்களுக்கு விருந்தளிக்க அரை டஜன் படங்கள் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளன. *கோமதி சங்கரின் ‘STEPHEN’ : டிச.5, நெட்ஃபிளிக்ஸ் *பிரணவ் மோகன்லாலின் ‘டைஸ் ரே’: டிச.5, ஜியோ ஹாட்ஸ்டார் * ரஷ்மிகாவின் ‘The Girlfriend’: டிச.5, நெட்ஃபிளிக்ஸ் *அஸ்வின் குமாரின் ‘தூள்பேட்டை போலீஸ் ஸ்டேஷன்’: டிச.5, ஆஹா *விதார்த்தின் ‘குற்றம் புரிந்தவன்’: டிச.5, சோனி லைவ் *வைபவின் ‘The Hunter’ Chapter 1: டிச.5, ஆஹா
News December 6, 2025
12 மாவட்டங்களில் மழை பொழியும்: IMD

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோவை, திருப்பூர், தென்காசி, நெல்லை, தேனி, கன்னியாகுமரியில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இரவுநேரத்தில் வாகனம் ஓட்டுவோர் மிகுந்த கவனத்துடன் பயணிக்கவும். உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?
News December 6, 2025
திருப்பரங்குன்றம் சர்ச்சை.. CM ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி

மக்களின் வளர்ச்சியின் மீது கவனம் செலுத்துவதை தவிர்த்து, இந்துக்களின் உணர்ச்சிகளை புண்படுத்துவதில் CM ஸ்டாலின் கவனம் செலுத்துவதாக தமிழிசை சாடியுள்ளார்.<<18474670>> திருப்பரங்குன்றம் விஷயத்தில்<<>> பாஜகவை CM சூசகமாக சாடிய நிலையில், அதை தமிழிசை விமர்சித்துள்ளார். மாநகராட்சி ஊழலில் மேயர் ராஜினாமா, மாசடைந்த வைகை நீர் பற்றிய HC-ன் கருத்தை சுட்டிக்காட்டி, இதுதான் உங்கள் வளர்ச்சியா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


