News November 4, 2025
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

2025 – 2026 கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார். அதன்படி, மார்ச் 11 – மொழிப்பாடம், மார்ச் 16 – ஆங்கிலம், மார்ச் 25 – கணிதம், மார்ச் 30 – அறிவியல், ஏப்.2 – சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறவுள்ளன. நடப்பாண்டில் 8,70,000 மாணவர்கள் இத்தேர்வை எழுத உள்ளனர். மே 5-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 4, 2025
முருகனை தரிசித்த ‘ஜனநாயகன்’ இயக்குநர்

விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ மீது எதிர்பார்ப்புகள் ஏராளம். இந்த படம் வரும் ஜன.9-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், படத்தின் இயக்குநர் H.வினோத், இயக்குநர் ரா.சரவணனுடன் இணைந்து பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். என்ன வேண்டிக் கொண்டிருப்பார் H.வினோத்? கமெண்ட்டில் சொல்லுங்கள்.
News November 4, 2025
இந்தியாவின் லெஜண்ட் தொழிலதிபர் காலமானார்

இந்தியாவின் பழம்பெரும் கூட்டு தொழில் நிறுவனமான, இந்துஜா குழுமத்தின் தலைவர் கோபிசந்த் இந்துஜா (85), வயது முதிர்வு காரணமாக காலமானார். மும்பையில் 1914-ல் தொடங்கப்பட்ட இக்குழுமம், இந்தியாவில் தொடங்கி பல்வேறு உலக நாடுகளில் விரிவடைந்துள்ளது. அசோக் லேலண்ட் வாகனங்கள் இந்த குழுமத்திற்கு சொந்தமானவை தான். பிரிட்டனில் வசித்து வந்த கோபிசந்த், 2023-ல் இக்குழுமத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றார்.
News November 4, 2025
சற்றுமுன்: விலை மளமளவென குறைந்தது

GST 2.0 மூலம் அனைத்து கார் நிறுவனங்களும் விலை குறைப்பை அதிரடியாக அறிவித்து வருகின்றன. மாருதியை தொடர்ந்து ஹோண்டா, பண்டிகை சலுகைகளுடன் சூப்பர் ஆஃபர்களை அறிவித்துள்ளது. எந்த மாடல் காருக்கு, அதிகபட்ச ஆஃபர் என்னவென்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நீங்க எந்த கார் வாங்க ப்ளான் பண்ணுறீங்க?


