News October 22, 2025
10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. மத்திய அரசு பணி

மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் உள்ள Border Roads Organisation-ல் காலியாகவுள்ள 542 மெக்கானிக் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், அந்தந்த பதவிகளுக்கு ஏற்ப தொழிற்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ₹20,200. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.24. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News October 24, 2025
இனிதான் மழை ஆட்டம் ஆரம்பம்

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 23 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, கடலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
News October 24, 2025
பிஹாரில் மோடி இன்று பரப்புரை

பிஹார் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தொகுதி பங்கீடு முடிந்த நிலையில், NDA, INDIA கூட்டணி தலைவர்கள் பம்பரம் போல், மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி, சமஸ்திபூர் மற்றும் பெகுசராயில் இன்று நடைபெறவுள்ள தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று NDA கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்கிறார்.
News October 24, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் ₹3000 குறைந்தது..

தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்த நிலையில், வெள்ளி விலை தலைகீழாக தொடர்ந்து குறைந்து கொண்டே இருக்கிறது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹3 குறைந்து ₹171-க்கும், கிலோ வெள்ளி ₹3000 குறைந்து ₹1,71,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாள்களில் வெள்ளி விலை ₹36,000 குறைந்துள்ளது. இதனால், நகை பிரியர்கள் பலர் வெள்ளியை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.


