News January 1, 2026
10 மாவட்டங்களில் மழை பொழியும்

அதிகாலை 4 மணி வரை TN-ல் உள்ள 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, விருதுநகர், தேனி, தஞ்சை, திருவாரூரில் லேசான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்து வீடு திரும்புவோர் பாதுகாப்பாக பயணிக்கவும். உங்க ஊரில் மழை பெய்கிறதா?
Similar News
News January 5, 2026
திருப்பூரில் பெண் உட்பட 4 பேர் கைது

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே தெற்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தை சோதனை செய்த போது அதில் கஞ்சா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கதிர்வேல், கோகுலகண்ணன், ஹரிகுமார் மற்றும் பெண் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
News January 5, 2026
தமிழிசையை புறக்கணித்த அமித்ஷா: மாணிக்கம் தாகூர்

புதுக்கோட்டையில் நயினார் பரப்புரை பயண நிறைவு விழாவில் தமிழிசை புறக்கணிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. விழா மேடையில் இருந்த எல்.முருகன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உட்பட ஆண் நிர்வாகிகள் பெயர்களை அமித்ஷா குறிப்பிட்ட நிலையில், பெண்ணான தமிழிசை பெயரை கூறவில்லை என மாணிக்கம் தாகூர் சாடியுள்ளார். இதுதான் RSS-ன் மனநிலையா, தமிழ் சகோதரிகளுக்கு ஏன் இந்த அவமதிப்பு என்றும் கேள்வியும் எழுப்பியுள்ளார்.
News January 5, 2026
இந்த 3 அறிகுறிகள் இருக்கா? சுகர் Confirm!

இந்த 3 அறிகுறிகள் இருந்தால் எதிர்காலத்தில் உங்களுக்கு சர்க்கரை நோய் வரலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். 1. கழுத்தை சுற்றி அளவுக்கு அதிகமாக கருமையாக இருத்தல் 2. கண்களுக்கு மேல், கழுத்தில் Warts எனப்படும் மருக்கள் வந்தால் 3. தொப்பை போட்டால் சுகர் வரும் ரிஸ்க் இருக்கிறதாம். இதனை சரி செய்ய நல்ல உணவும், உடற்பயிற்சியும் தேவை. அத்துடன் டாக்டரை அணுகுவது நல்லது. விழிப்புணர்வுக்காக SHARE THIS.


