News May 8, 2024
10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 முதல் 40 கிமீ வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன்படி திருவள்ளூர் உட்பட 12 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News July 6, 2025
திருவள்ளூர் மீன் மார்க்கெட் விலை நிலவரம்

திருவள்ளூர் மின் நிலவரம் (கிலோவில்) : வஞ்சிரம் மீன் ரூ.900-1000, பண்ண மீன் கிலோ ரூ.300-350, பாறை மீன் கிலோ ரூபாய்.200-300, இறால் (சிறியது) கிலோ ரூபாய்.200, (பெரியது) ரூபாய்.300-500, நண்டு கிலோ ரூபாய்.200-300, பெரிய நண்டு ரூ.400-800, சங்கரா மீன் கிலோ ரூ.400-450, பாறை மீன் கிலோ ரூ. 200-250, மத்தி மீன் கிலோ ரூ.60, ஊடான் மீன் ரூ.300, ஏரி மடவைர ரூ.200, கட்லா ரூ.200-250, ஏரிக்கண்டை ரூ.200 க்கு விற்பனை
News July 6, 2025
திருவள்ளூர் மாவட்ட இளைஞர் ஒடிசா மாநிலத்தில் கொலை

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் சட்ட விரோதமாக கஞ்சா கொள்முதலுக்காக ஒடிஷா மாநிலம் சென்றுள்ளார். அவரை பிடித்து வைத்து, 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கும்பல், அவரை கொலை செய்து, பிணத்தை வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடத்தல் கும்பல் பணம் கேட்டு மிரட்டுவது குறித்து போலீசில் புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியடைந்த மக்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்
News July 5, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.