News December 25, 2025
10 பேர் பெயரை விஜய்யால் சொல்ல முடியுமா? நயினார்

இந்தியாவையே நாளை பிடித்துவிடுவேன் என்று கூட விஜய் சொல்லலாம் என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். 234 தொகுதிகளில் வரிசையாக 10,15 வேட்பாளர்கள் பெயரை அவரால் சொல்ல முடியுமா? விஜய்யை குறை சொல்லவில்லை, அவருக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதை மறுக்கவில்லை; ஆனால், இது சினிமா அல்ல, அரசியல். அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் போட்டு, வேட்பாளர்கள் விலை போகாமல் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 27, 2025
விபத்து: வாழப்பாடி முன்னாள் தலைவர் பலி!

வாழப்பாடி புதுப்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ராஜா (53). கடந்த 11-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 27, 2025
தங்கம், வெள்ளி.. ஒரே நாளில் ₹20,000 விலை மாறியது

தங்கமும் வெள்ளியும் போட்டி போட்டுக்கொண்டு தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன. <<18682690>>தங்கம் இன்று சவரனுக்கு ₹880<<>> உயர்ந்த நிலையில், வெள்ளி கிலோவுக்கு ₹20,000 அதிகரித்துள்ளது. இதனால், சில்லறை விலையில் 1 கிராம் வெள்ளி ₹274-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹2,74,000-க்கும் விற்பனையாகிறது. இது முதலீடு நோக்கத்தில் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
News December 27, 2025
அத்தைக்கு மீசை முளைக்கட்டும்: சேகர்பாபு

பாஜக ஆட்சிக்கு வந்தால் அறநிலையத்துறை கலைக்கப்படும் என H.ராஜா தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, ‘அத்தைக்கு மீளை முளைத்தால் தான் அவர் சித்தப்பா; முதலில் அவரை ஒரு தொகுதியில் நின்று வெல்ல சொல்லுங்கள்’ என்று குறிப்பிட்டார். H.ராஜாவுக்கு எதிராக திமுக சாதாரண தொண்டனை நிறுத்தி மண்ணை கவ்வ வைக்கும் என்றும் கூறினார். பாஜக அவரை கண்டுகொள்ளாததால் இப்படி பேசிவருவதாகவும் தெரிவித்தார்.


