News August 31, 2025

10-ஆம் மதிப்பெண் சான்றிதழ் செப்டம்பா் 3- இல் பெறலாம்

image

ஈரோடு, கடந்த மாா்ச்-ஏப்10- ஆம் வகுப்பு தோ்வு எழுதிய மாணவகள் தனி தோ்வா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் கடந்த வாரம் தோ்வுத் துறைக்கு வந்தது. அவற்றை தோ்வுத் துறையினா் தீவிர சரிபாா்ப்பு பணியில் ஈடுபட்டனா்.ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 352 அரசு, அரசு நிதியுதவி, மெட்ரிக். பள்ளிகளைச் சோ்ந்த 24,160 மாணவ, மாணவிகள், 840 தனி தோ்வா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

Similar News

News September 3, 2025

மிலாது நபி – ஈரோட்டில் டாஸ்மாக் கடைகள் மூடல்!

image

மிலாது நபியை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், மதுபானக் கூடங்கள், எப்எல்2 மற்றும் எப்எல்3 மதுபான விடுதிகள், ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் வரும் 5-ஆம் தேதி மூடப்பட வேண்டும்.இதை மீறி மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News September 3, 2025

ஈரோடு: ரூ.20 செலுத்தினால் ரூ.2 லட்சம் காப்பீடு!

image

ஈரோடு, பவானியைச் சேர்ந்த நாராயணன் என்பவர், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் விபத்து காப்பீடு செய்திருந்தார். இவர் கடந்த ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்த காரணத்தால், நாராயணன் குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை நேற்று வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும், ரூ.2 லட்சம் கிடைக்கும்.விண்ணபிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும்.SHAREit

News September 3, 2025

வரியை குறைக்க விசைத்தறியாளர்கள் கோரிக்கை!

image

தமிழகத்தில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்படுகின்றன. இதன் மூலமாக 20 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்த தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருவதால் மீட்டெடுக்க மத்திய அரசு உதவ வேண்டும் என்றும், இதற்காக செயற்கை இழை நூலுக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!