News September 5, 2024
10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை: எஸ்பி பாராட்டு

ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட புதுபுங்கனூர் கிராமத்தை சேர்ந்த பொன்முடி (வ/33) என்பவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம் என ராணிப்பேட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் இன்று (05.09.2024) தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளை மாவட்ட எஸ்பி பாராட்டினார்.
Similar News
News September 9, 2025
நல்லாசிரியர்களுக்கு அமைச்சர் வாழ்த்து

பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற இராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 9 ஆசிரியர்கள் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தியை இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா மாவட்ட கல்வி அலுவலர் பிரேமலதா கலந்து கொண்டனர்.
News September 9, 2025
ராணிப்பேட்டை: போதையில் குளத்தில் தவறி விழுந்தவர் பலி

ராணிப்பேட்டை மாவட்டம், விஷாரம் பகுதியில் தனியார் பெட்ரோல் பங்கில் வேலை செய்த சரவணன் விஷாரம் குளத்து மேட்டு பகுதியில் உள்ள பூங்காவில் மது அருந்தி, போதையில் குளத்தில் விழுந்து உயிரிழந்தார். ஆற்காடு நகர போலீசார் உடலை மீது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News September 9, 2025
BREAKING: ராணிப்பேட்டைக்கு வருகிறார் விஜய்

தவெக தலைவர் விஜய், சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில், தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளதாக அறிவித்தார். அதன்படி தனது முதல் அரசியல் பிரச்சார பயணத்தை 13/09/25 திருச்சியில் தொடங்கிறார். இதைதொடர்ந்து, தி.மலை, விழுப்புரம் அதன் பின் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 18/10/25 அன்று வருகை தந்து, மக்களிடையே கலந்துரையாட உள்ளார்.