News April 5, 2025

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது

image

காட்பாடியைச் சேர்ந்தவர் ஜாகீர்(50), கூலித் தொழிலாளியான இவர், 4ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியை அழைத்து சென்று நேற்று (ஏப்ரல் 4) பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றுள்ளார். அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசாரை அழைத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காட்பாடி போலீசார், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஜாகீரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Similar News

News April 7, 2025

வேலூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தில் இரவு நேரங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், காவல் துறை சார்பில் (06.04.2025) இன்று இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரோந்து 1 முதல் 5 வரை மொத்தமாக 5 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவுக்கும் ஓர் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் பொறுப்பாக உள்ளனர்.

News April 6, 2025

வேலூர்: முன் ஜென்ம பாவங்கள் நீங்க செல்ல வேண்டிய கோவில்

image

வேலூர் விண்ணம்பள்ளி பழமையான அகத்தீஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் மீது சூரியஒளி விழும் நிகழ்வு பங்குனி மாதம் 23ம் தேதி முதல் சித்திரை 1 வரை நடைபெறும். இந்த ஆண்டும் வரும் ஏப். 14-ஆம் தேதி வரை இந்நிகழ்வு நடைபெற உள்ளது. சிவனை சூரியன் வழிபடும் காட்சியை கண்டால் முன்ஜெனம பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. அதனாலேயே ஏராளமான பகதர்கள் வருகை தந்து வழிபட்டு செல்கின்றனர். ஷேர் பண்ணுங்க 

News April 6, 2025

வேலூரில் தமிழில் பெயர் வைக்க ஆட்சியர் உத்தரவு

image

வேலூர்ஆட்சியர் அறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “மாவட்டத்தில் உள்ள கடைகள், ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள், அனைத்து வகையான தொழிற்சாலைகள் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் வருகிற மே 15-ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்; தமிழ், ஆங்கிலம் மற்றும் தேவைபட்டால் பிற மொழிகளிலும் எழுதி கொள்ளாலாம்” என குறிப்பிட்டுள்ளார். *உங்களுக்கு தெரிந்த கடை வைத்திருப்போர்& தமிழ் ஆர்வலர்களுக்கு பகிரவும்*

error: Content is protected !!