News May 10, 2024
10 வகுப்பு பொது தேர்வு முடிவு- மாணவி அசத்தல்
பந்தலூர், எருமாடு அரசு மகளிர் உயர்நிலை பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொது தேர்வில் மாணவி அஸானா 489 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இவருடைய தந்தை நாகராஜ். தாயார் சஜிதா. இருவரும் ஆட்டோ ஓட்டுநராக உள்ளனர். தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News November 20, 2024
கோத்தகிரி கூட்டுறவு வங்கியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கோத்தகிரி தாலுக்காவில் ‘உங்களைத் உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது. அப்போது நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்கள் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கோத்தகிரி கிளை வங்கிக்கு சென்றார். அங்கு வங்கி பணிகள் மற்றும் விவசாய கடன் சம்மந்தப்பட்ட பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். கிளை மேலாளர் வனஜா உடன் இருந்தார்.
News November 20, 2024
நீலகிரி: இன்றைய தலைப்பு செய்திகள்
➤நீலகிரியில் விவரங்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல் ➤சிறுவர்களை விரட்டிய ஒற்றை காட்டு யானை ➤சிரியூர் கோயிலுக்கு செல்ல வேண்டாம் ➤புவிசார் குறியீட்டுக்கு காத்திருக்கும் ஊட்டி சாக்லெட் ➤மருத்துவமனையில் நீலகிரி எஸ்.பி ஆய்வு ➤வீரதீர செயல்புரிந்தோர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் ➤346 பேர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி ➤நீலகிரி பழங்குடியினரை சந்திக்கும் ஜனாதிபதி ➤நீலகிரியில் பெண்கள் கும்மி ஆட்டம்.
News November 20, 2024
நீலகிரியில் விவரங்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழில் நடத்தும் தனியார் நிறுவனங்கள், தங்கள் வேலைக்கு அமர்த்தியுள்ள வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை, தொழிலாளர் நலத்துறை வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்யுமாறு, தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது. பதிவேற்றம் செய்த விபரங்களை குன்னூர் தொழிலாளர் உதவியாளர் அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு குன்னூர் தொழிலாளர் உதவி ஆணையர் தாமரை மணாளன் தெரிவித்துள்ளார்.