News March 28, 2024
10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் சொத்து மதிப்பு

சு.வெங்கடேசன் பெயரில் அசையும் சொத்து ரூ.98,26,389, அவரது மனைவி பெயரில் ரூ.91,16,165 சொத்து உள்ளது. பூர்வீக சொத்து, மகள் பெயரில் உள்ள சொத்து எல்லாம் சேர்த்து மொத்தம் ரூ.2 கோடியே 4 லட்சத்து 66 ஆயிரத்து 389 உள்ளதாக சு.வெங்கடேசன் தெரிவித்து உள்ளார்.
2019 தேர்தலின் போது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சேர்த்து மொத்தம் 19 லட்சம் என்று கணக்கு காட்டியுள்ளார். 5 ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்துள்ளது.
Similar News
News November 24, 2025
மதுரை: வியாபாரிகள் – போலீசார் இடையே தள்ளுமுள்ளு

மதுரை மாவட்டம் தபால்தந்தி நகர் பாமா நகர் பகுதியில் காய்கறி சந்தை இயங்கி வந்தது. இந்நிலையில் மாநகராட்சி அந்த காய்கறி சந்தைக்கு அனுமதி மறுத்தது. இதனால் நேற்று வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி அதிகாரிகளின் சமரசத்தை வியாபாரிகள் ஏற்காத நிலையில் போலீசார் கைது செய்தபோது அவர்களுக்கிடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
News November 24, 2025
JUST IN மதுரை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (24.11.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உத்தரவிட்டுள்ளார் என மதுரை செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 24, 2025
மதுரை: குறுக்கே வந்த நாயால் பறிபோன உயிர்

சோழவந்தான் கண்ணன் மகன் வீரமணிகண்டன் 25. தனியார் பைனான்ஸ் ஊழியர். பள்ளபட்டி- திருமங்கலம் ரோட்டில் டூவீலரில் சோழவந்தானுக்குச் சென்றபோது அரசு விதைப்பண்ணை அருகே நாய் ஒன்று குறுக்கே வந்தது. உடனடியாக பிரேக் பிடித்ததில் நிலை தடுமாறி விழுந்ததில் தலையில் அடிபட்டு இறந்தார். விபத்து குறித்து சோழவந்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


