News August 8, 2024
10 நாட்களில் 6,310 டன் குப்பை கழிவுகள் அகற்றம்

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும், கடந்த 10 நாட்களாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்தத் தீவிர தூய்மைப் பணிகளில், சுமார் 6,310 மெட்ரிக் டன் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகள் அருகே கட்டிட கழிவுகள் கொட்டினால் ரூ.500 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News November 29, 2025
துணை நடிகைக்கு பாலியல் தொல்லை: உதவி கமிஷனர் மாற்றம்

திருமணம் செய்வதாக உல்லாசமாக இருந்து ஏமாற்றிய காதலன் மீது புகார் அளிக்க வந்த இளம் பெண் இன்ஜினியருக்கு வாட்ஸ் ஆப் மூலம் உல்லாசத்திற்கு அழைத்து பாலியல் தொந்தரவு செய்தியாக புகார் எழுந்தது. இந்நிலையில் விருகம்பாக்கம் உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு மற்றும் பெண் எஸ்ஐ ஆகியோரை கமிஷனர் அருண் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
News November 29, 2025
மாநில அளவிலான மாபெரும் ஆணழகன் போட்டி

மாத்தூர் பிரவீன் மஹால் திருமண மண்டபத்தில் இன்று (நவ 28), மாதவரம் வடக்கு பகுதி திமுக சார்பில், தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மாநில அளவிலான மாபெரும் ஆணழகன் போட்டியில் முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு, சைக்கிள் மிக்ஸி சோபா ஆகியவற்றை மாதவரம் வடக்கு பகுதி செயலாளர் புழல் எம் நாராயணன் வழங்கினார்கள்.
News November 29, 2025
சென்னையில் நாளை SIR சிறப்பு முகாம் நடைபெறும்!

சென்னையில் பூர்த்தி செய்த கணக்கீட்டு படிவங்களை பெறுவதற்கான சிறப்பு உதவி மையங்கள் நாளை நவ 29-11-2025 செயல்படும். அதிக வாக்காளர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு, பன்முது வளாக குடியிருப்பில் உள்ள வாக்காளர்களுக்காக சிறப்பு மையம் செயல்படும். வாக்காளர் சிறப்பு உதவி மையங்கள் நாலை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என அறிவித்துள்ளது.


