News August 17, 2024
10 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கிய அதிகாரிகள்

மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெயராம பாண்டியன் தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறையினர் மதுரை மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று நாட்களில் 27 குளிர்பான தயாரிப்பு மற்றும் விற்பனை கடைகளில் ஆய்வு நடத்தினர். இதில் காலாவதியான 32 லிட்டர் குளிர்பானம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், விதியை மீறிய 10 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டும், 7 கடைகளுக்கு தலா ரூ.1000 அபராதம் விதித்துள்ளனர்.
Similar News
News October 17, 2025
சதுரகிரி செல்ல 5 நாட்கள் தடை

மதுரை சங்ககிரி மகாலிங்கம் மலைக்கோயில் 18ம் தேதி ஐப்பசி மாத சனி பிரதோஷம் 21ஆம் தேதி அமாவாசை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகம் இருக்கும். ஆனால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை பெய்வதால் சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது எனவே (இன்று) 17 முதல் 21ஆம் தேதி வரை 5 நாட்கள் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலையேறிச் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
News October 17, 2025
ரூ 5 கோடியில் திருமலை நாயக்கர் மஹாலில் டிஜிட்டல் ஒலி ஒளி காட்சி

மதுரையில் சரித்திர அடையாள பெருமைகளில் ஒன்றாக இருப்பது திருமலை நாயக்கர் மஹாலில் நடத்தப்பட்டு வரும் ஒலி ஒளி காட்சி சுற்றுலா பயணிகள் பொதுமக்களை மிகவும் கவர்ந்ததாக இருந்தது பழுதடைந்த இந்த காட்சி சேவையை புதுப்பிக்க ரூ 5 கோடி செலவில் லேசர் ஒலி ஒளி 3 டி புரஜக்சன் தொழில் நுட்பத்தில் நவீன முறையில் தயாராகிவரும் ஒலி ஒளி காட்சி பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சேவை டிசம்பருக்குள் துவக்கப்பட உள்ளது.
News October 17, 2025
மதுரையில் சோகம்… தீபாவளிக்கு வந்தவர் தற்கொலை

மதுரை பழங்காநத்தம் ஆர்சி தெரு கருப்பசாமி மகன் அசோக்குமார் 26 தஞ்சாவூரில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமான நிலையில், தீபாவளி பண்டிகையொட்டி மனைவிக்கு ஜவுளி எடுக்க அசோக் குமார் மதுரை வந்தார். இங்கே அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மன உளைச்சலில் அசோக் குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் போலீசார் விசாரிக்கின்றனர்.