News May 10, 2024
10வது இடம் பிடித்து விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டம் 10ம் வகுப்பு தேர்வில், மாநில அளவில் 10வது இடத்தினை பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 93.51 ஆகும். மாநில அளவில் அரசு பள்ளிகளில் விழுப்புரம் 6வது இடம் பெற்றுள்ளது. சென்ற 2022.2023 கல்வியாண்டில் 90.57 சதவிதம் பெற்று, மாநில அளவில் 24வது இடத்தில் இருந்த விழுப்புரம், தற்போது 3.54 சதவீதம் உயர்ந்து 94.11 சதவீதம் பெற்று மாநில அளவில் 10வது இடத்தினை பெற்றுள்ளது.
Similar News
News February 15, 2026
விழுப்புரத்தில் ஒருவர் வெட்டிக் கொலை!

செஞ்சி வட்டம் மழவந்தாங்கல் கிராம டாஸ்மாக் கடை அருகில் வாசுதேவன் என்பவரின் மகன் அய்யனார்(42) தலையில் வெட்டு காயங்களுடன் நேற்று (பிப்.14) மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து கண்டாச்சிபுரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 15, 2026
விழுப்புரத்தில் இளைஞர் துடி துடித்து பலி!

செஞ்சி அடுத்த சங்கீதமங்கலத்தை சேர்ந்தவர் நேர்மையானவன் (வயது 36) மோட்டார் சைக்கிளில் வேலை முடித்து வந்துகொண்டிருந்தார். அப்போது லலிதா (45) லிப்ட் கேட்டதால் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். அப்போது திடீரென பைக் அங்குள்ள பாலத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே நேர்மையானவன் உயிரிழந்தார். லலிதா சிகிக்சை பெற்று வருகின்றார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 15, 2026
விழுப்புரத்தில் விவசாயி தற்கொலை முயற்சி!

பெண்னைவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பாஸ், விவசாயி. இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஜே.சி.பி., வாங்குவதற்காக தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியிருந்தார்.நிதி கட்டுமாறு நிறுவனத்தில் இருந்து கடனை கட்டுமாறு நோட்டீஸ் அனுப்பினர். கடனை திருப்பி செலுத்தவில்லை. இதையெடுத்து அவர் மீது நடவடிக்கை புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அப்பாஸ் தன் மீது தீ மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்


