News April 8, 2025
10ம் வகுப்பு கணித தேர்வு 609 மாணவர்கள் ஆப்சென்ட்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 499 பள்ளிகளை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர்கள் 147 மையங்களில் கணித பொதுத்தேர்வு நேற்று எழுதினர்.இதில் தேர்வு எழுத 30 ஆயிரத்து 635 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 30 ஆயிரத்து 26 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 609 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை. இந்த மாணவர்களுக்கான அறிவியல் பொதுத்தேர்வு வரும் 11ம் தேதி நடக்கவுள்ளது.
Similar News
News April 17, 2025
வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்திற்கு பயனாளிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்து உள்ளார். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுடைய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்டவட்டார வளர்ச்சி அலுவலரிடம் (வட்டார ஊராட்சி) வரும் 21-ந் தேதி (திங்கட்கிழமை) வரை அளிக்கலாம்.
News April 17, 2025
அங்கன்வாடி பணி: விண்ணப்பிப்பது எப்படி?

தி.மலை மாவட்டத்தில் 439 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், இந்த <
News April 17, 2025
தி.மலை மாணவி விபரீத முடிவு

தி.மலை நாச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த அனுப்பிரியா என்பவர் கோவை ஹிந்துஸ்தான் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் வகுப்பறையில் 1,500 ரூபாய் திருடியதாக அபத்தமாக பழி சுமத்திப்பட்டதாக, மன உளைச்சலில் கல்லூரியின் 4வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார். கல்லூரி நிர்வாகம் தரப்பில் அளித்த விளக்கம் நியாயமானது அல்ல என சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.