News February 28, 2025

10ஆம் வகுப்பு பாஸ் போதும்.. அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு..

image

அஞ்சல்துறையில் 21,413 கிராம அஞ்சல் பணியாளர்கள் புதிதாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.10,000 – 29,380 வரையிலான மாதச் சம்பளத்தில் 2,292 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க, <>[https://indiapostgdsonline.gov.in]<<>> என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க..

Similar News

News August 5, 2025

மயிலாடுதுறை: இப்படி ஒரு பெயர்களா?

image

மயிலாடுதுறை மாவட்டம் பல வரலாற்று சிறப்புகளை கொண்டுள்ளது. அவ்வாறு உள்ள இம்மாவட்டத்தின் முக்கிய ஊர்கள் முற்காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது என்பதை காண்போம். மயிலாடுதுறை – மாயவரம், பூம்புகார் – காவிரிப்பூம்பட்டினம், தரங்கம்பாடி – ட்ரான்கேபார், சீர்காழி – பிரம்மபுரம், குத்தாலம் – திருத்துருத்தி, செம்பனார்கோவில் – இந்திரபுரி, மணல்மேடு – நாகநாதபுரம் என அழைக்கப்பட்டது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News August 4, 2025

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு ஒப்பந்த பணிக்கு விண்ணப்பம்

image

தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு மிஷன் வத்சல்யா திட்டத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்ப படிவம் விளக்கக் குறிப்புகளை http://mayiladuthurai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 11, 2025

மயிலாடுதுறை கலெக்டர் எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜூலை 15ஆம் தேதி முதல் 130 இடங்களில் நடைபெற உள்ள “உங்களுடன் ஸ்டாலின் ” முகாம்களில் மட்டுமே இரண்டாம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான படிவங்கள் வழங்கப்படும். தனியார் கடைகளிலும், வணிக நிறுவனங்களிலும் போலியாக விற்கப்படும் விண்ணப்பங்களை வாங்கி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!