News July 7, 2025
10ஆம் வகுப்பு தேர்ச்சி உள்ளூரில் அரசு வேலை!

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சேலம் மாவட்டத்தில் மட்டும் 105 பணியிடங்கள் நிரப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் பணியாற்றுபவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.<<16974209>>தொடர்ச்சி<<>>(1\2)
Similar News
News August 21, 2025
சேலத்தில் வேலை வேண்டுமா..? நாளை முக்கியம்!

சேலம், கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், ஒவ்வொரு மாதத்திலும் 3-வது வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாளை (ஆக.22) காலை 10.00 மணிக்கு முகாம் நடைபெறுகிறது. வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், இளம்பெண்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் மணி கேட்டுக்கொண்டுள்ளார். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவுங்க!
News August 21, 2025
சேலம்: தெருநாய் தொல்லையா..? உடனே CALL!

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 18 பேர் நாய் கடியால் உயிரிழந்துள்ளனர். மேலும், தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அதிகபட்சமாக 19,250 பேரை தெருநாய்கள் தாக்கி கடித்திருப்பதாக, பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சேலம் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை இருந்தால் 8300062992 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!
News August 21, 2025
சேலம்: வாலிபர் படுகொலை வழக்கில் 6 பேருக்கு குண்டாஸ்!

கடந்த ஜூலை 15- ஆம் தேதி தூத்துக்குடியைச் சேர்ந்த மதன்குமார் (25) என்பவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இசக்கிராஜா (35), விக்னேஷ் (20), பிரவீன்ஷா (22), கிருஷ்ணகாந்த் (28), செல்வபூபதி (26), முத்து ரிஷிகபூர் (28) ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவிட்டார். இதையடுத்து, 6 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.