News May 11, 2024
10ஆம் வகுப்பில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த 4 பேர்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழக அளவில் 4 மாணவிகள் 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காவியா ஸ்ரீ, இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காவியா ஜனனி, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சனா அனுஷ், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தியா ஆகியோர் 4 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்களும், ஒரு பாடத்தில் 99 மதிப்பெண்ணும் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
Similar News
News September 21, 2025
தமிழ் படங்களுக்கு ஆஸ்கர் தகுதி இல்லையா?

சினிமாவில் உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர். இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான இந்தியாவின் ஆஸ்கர் பரிந்துரை பட்டியல் வெளியாகியுள்ளது. தனுஷின் நேரடி தெலுங்கு படமான ‘குபேரா’ லிஸ்ட்டில் உள்ளது. மேலும், புஷ்பா 2, கண்ணப்பா படங்களும் உள்ளன. ஆனால், ஒரு தமிழ் படம் கூட இடம்பெறவில்லை என்பது வருத்தமான ஒன்றாக அமைந்துவிட்டது. 2025 ஆஸ்கருக்கு தகுதியான தமிழ் படங்கள் என்று நீங்கள் கருதுவது எது?
News September 21, 2025
இந்த ஒரு மீன் போதும்.. ஹார்ட் அட்டாக்கே வராது

சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவருக்கும் சர்வசாதாரணமாக ஹார்ட் அட்டாக் வருகிறது. இதனை தடுக்க சால்மன் வகை மீன்களை சாப்பிடலாம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த மீன்களில் அதிகமாக ஒமேகா 3, புரதம், வைட்டமின் டி, பி12, செலினியம் இருப்பதால் இதய பிரச்னைகள் வரும் அபாயம் குறைக்கிறதாம். எனவே Red Meat-க்கு பதிலாக இவ்வகை மீன்களை உண்ணலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். கண்டிப்பா SHARE பண்ணுங்க.
News September 21, 2025
விஜய் குற்றச்சாட்டு: ஒப்புக்கொண்ட திமுக MLA

நெல் கொள்முதலில், 40 கிலோ மூட்டைக்கு ₹40 கமிஷன் வாங்குவதாக விஜய் குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், இவ்வளவு வாங்குவதில்லை, சும்மா ஏதோ வாங்குறாங்க, நான் இல்லைன்னு சொல்லல என்று திருவாரூர் திமுக MLA பூண்டி கலைவாணன் ஓபனாக கூறியுள்ளார். இந்த பணமும் விவசாயிகள் விருப்பப்பட்டு தருவதுதானே தவிர, கட்டாயம் அல்ல என்றும், லோடு மேன் கமிஷன் வாங்குவதற்கும் முதல்வருக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.