News March 26, 2025
10வது பாஸ் போதும்; இலவச பயிற்சியுடன் வேலை

தமிழ்நாடு அரசு சார்பில், மருத்துவ துறை சார்ந்த முதியோர் பராமரிப்பு உதவியாளர் பயிற்சி தமிழ்நாடு முழுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம், முதியவர்களை பார்த்துக்கொள்ளும் வேலைவாய்ப்புகளை பெறலாம். 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். பயிற்சி – 3 மாதம். இதற்கு வயது வரம்பு கிடையாது. கூடுதல் விவரங்களுக்கு மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்தினை அணுகவும். ஷேர் பண்ணுங்க
Similar News
News December 3, 2025
தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் பெட்டிஷன் மேளா!

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று (டிச3)ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 2 மணி வரை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.S.மகேஸ்வரன் தலைமையில் பொதுமக்களின் பெட்டிஷன் மேளா நடைபெற்றது. இப்பெட்டிஷன் மேளாவில் பொதுமக்களால் வழங்கப்பட்ட 49 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 49 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது. மேலும், இன்று புதிதாக 37 மனுக்கள் பெறப்பட்டன.
News December 3, 2025
தருமபுரி: பைக்கில் சென்றவர் சாலை விபத்தில் பலி!

தருமபுரி, பஞ்சாப்பள்ளி அடுத்த ஒட்டர்தின்னை கிராமத்தை சேர்ந்தவர் ஆஞ்சி (35), கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் ஆஞ்சி ராயக்கோட்டை செல்லவேண்டி கூலிக்கானூர்-சூடானூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென முன்னே சென்ற டிராக்டரில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த பஞ்சப்பள்ளி போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
News December 3, 2025
தருமபுரியில் கனமழை வெளுக்கும்!

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில் குளிர்ச்சியான சூழ்ல் நிலவி வந்தது. இந்நிலையில் நாளை (டிச.04) தருமபுரி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே நாளை வேலைக்கு மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் அதற்கு ஏற்றவாறு தங்களின் பயனத்தை அமைத்து கொள்ளவும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


