News March 17, 2025

10ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

பர்கூர் அடுத்து மட்டாரபள்ளியை சேர்ந்த வேலன் என்பவரின் மகள் கீர்த்திகாஶ்ரீ (16).இவர் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார்.பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை செய்தும் பலனளிக்காததால் மன அழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Similar News

News March 18, 2025

கிருஷ்ணகிரியில் 2,000 ஆண்டுகள் பழமையான ஓவியம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, கிருஷ்ணகிரி மலையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மலையின் மேற்குப் பகுதியில் 50 அடி உயரத்தில் 80 அடி நீளமான பாறையின் அடியில், மனிதன் தங்கிய அடையாளமாகப் பழமையான வெண் சாந்து பாறை ஓவியங்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். இவை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட ஓவியங்கள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

News March 18, 2025

உங்க வீட்டுல குழந்தைகள் இருக்கா! மிஸ் பண்ணிடாதீங்க

image

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக வைட்டமின் ஏ சத்து குறைபாடு நோய்கள் மாலை கண் தொடர்பான நோய்களை தடுப்பதற்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மார்ச் 17 முதல் மார்ச் 22 வரை 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க.

News March 18, 2025

திடீர் வலிப்பு ஏற்பட்டு இளைஞர் பலி

image

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்துார் அடுத்து செவ்வத்துார் ஊராட்சி மைக்கா மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஞ்சி(35) கூலி தொழிலாளி. இவர் நத்தகாயம் கிராமத்தில் தங்கி வேலை செய்து வந்தார். வேலை முடிந்து நேற்று மாலை வீடு திரும்பிய போது நிலைதடுமாறி கீழே விழுந்தவருக்கு வலிப்பு ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மத்துார் போலீசார் ஆஞ்சி உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!