News April 16, 2025

1 சவரன் தங்கம் 4 மாதங்களில் ₹13,320 அதிகரிப்பு

image

1 சவரன் தங்கம் 4 மாதங்களில் ₹13,320 அதிகரித்துள்ளது. ஜன.1-ல் 1 கிராம் ₹7,150ஆகவும், 1 சவரன் ₹57,200ஆகவும் விற்கப்பட்டது. பிப். 1-ல் 1 கிராம் ₹7790, 1 சவரன் ₹62,320-ஆக விற்கப்பட்டது. மார்ச் 1-ல் 1 கிராம் ₹7,940, 1 சவரன் ₹63,520ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 கிராம் ₹8,815, 1 சவரன் ₹70,520ஆக அதிகரித்துள்ளது. படிப்படியாக விலை அதிகரித்து தங்கம் புதிய உச்சம் தொட்டுள்ளது.

Similar News

News April 16, 2025

கேரள அதிமுக செயலாளர் மறைவு: இபிஎஸ் இரங்கல்

image

கேரள மாநில அதிமுக செயலாளர் ஜி. சோபகுமார் மறைவுக்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ஜி. சோபகுமார் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், அவரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.

News April 16, 2025

வன்முறைக்கு அமித் ஷாவே காரணம்: மம்தா குற்றச்சாட்டு

image

மேற்குவங்கத்தில் ஏற்பட்ட வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டதாக அம்மாநில CM மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். வன்முறைக்கு பின்னால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் BSF இருப்பதாகவும் மம்தா சாடியுள்ளார். அமித் ஷாவை பிரதமர் மோடி கட்டுக்குள் வைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும் மம்தா தெரிவித்துள்ளார்.

News April 16, 2025

வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைப்பு அமலுக்கு வந்தது

image

கடன்களுக்கான வட்டியை பாரத ஸ்டேட் வங்கி (SBI ) அடிப்படை 25 புள்ளிகள் குறைப்பதாக அறிவித்து இருந்தது. இதனால் அந்த வங்கியில் வீடு, வாகனக் கடன் உள்ளிட்ட கடன்களை வாங்கியோர் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்த வட்டி குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதேபோல் பேங்க் ஆப் இந்தியா வங்கியும் கடனுக்கான வட்டியை அடிப்படை 25 புள்ளிகள் குறைத்துள்ளது. இந்த வட்டி குறைப்பும் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

error: Content is protected !!