News April 16, 2025
1 சவரன் தங்கம் 4 மாதங்களில் ₹13,320 அதிகரிப்பு

1 சவரன் தங்கம் 4 மாதங்களில் ₹13,320 அதிகரித்துள்ளது. ஜன.1-ல் 1 கிராம் ₹7,150ஆகவும், 1 சவரன் ₹57,200ஆகவும் விற்கப்பட்டது. பிப். 1-ல் 1 கிராம் ₹7790, 1 சவரன் ₹62,320-ஆக விற்கப்பட்டது. மார்ச் 1-ல் 1 கிராம் ₹7,940, 1 சவரன் ₹63,520ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 கிராம் ₹8,815, 1 சவரன் ₹70,520ஆக அதிகரித்துள்ளது. படிப்படியாக விலை அதிகரித்து தங்கம் புதிய உச்சம் தொட்டுள்ளது.
Similar News
News November 24, 2025
துபாய் ஏர் ஷோ.. அமெரிக்க கேப்டன் அதிருப்தி

தேஜஸ் விமான விபத்தில் நமன்ஷ் சியாலுக்கு உயிரிழந்த பிறகும் துபாய் ஏர் ஷோ தொடர்ந்தது குறித்து அமெரிக்க F-16 குழுவின் கேப்டன் டெய்லர் ஹிஸ்டர் அதிருப்தி தெரிவித்துள்ளார். நமன்ஷுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, தங்களது குழு இறுதி சாகசத்தை நிகழ்த்தாமல் வெளியேறியதாக அவர் பேசியுள்ளார். விபத்தை தொடர்ந்து, ஏர் ஷோ தொடரப்பட்டு அடுத்தடுத்த சாகசங்களை மக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்ததாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
News November 24, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 24, கார்த்திகை 8 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:00 AM – 7:30 AM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: ரோகிணி ▶சிறப்பு: சதுர்த்தி, பதரி கவுரி விரதம். ▶வழிபாடு: சிவன் கோயிலில் சங்காபிஷேகம் தரிசித்தல்.
News November 24, 2025
பன்னாட்டு தலைவர்களுடன் PM மோடி சந்திப்பு

ஜி20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக கனடா, ஜப்பான், இத்தாலி நாடுகளின் PM-கள், பிரேசில், தெ.ஆப்பிரிக்காவின் அதிபர்கள் ஆகியோருடன் PM மோடி தனித்தனி சந்திப்பை நடத்தினார். அப்போது, உலக அமைதி, தீவிரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு, டிஜிட்டல் மேம்பாடு, காலநிலை மாற்றம், எல்லை பாதுகாப்பு, யுரேனியம் விநியோகம் உள்ளிட்ட பல ஒத்துழைப்புகள் குறித்து மோடி ஆலோசித்துள்ளார்.


