News April 28, 2025

3 நாள்களில் 1 சவரன் தங்கம் ₹2,800 சரிவு

image

ஏப்.22-ல் <<16240956>>தங்கம்<<>> விலை 1 கிராம் ₹9,290ஆகவும், 1 சவரன் ₹74,320 ஆகவும் அதிகரித்தது. அதற்கடுத்து 23, 24-ம் தேதிகளில் 1 கிராம் தங்கம் ₹285-ம், 1 சவரன் ₹2,280-ம் குறைந்தது. அதன்பிறகு 3 நாள்களாக விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று கிராமுக்கு ₹65-ம், சவரனுக்கு ₹520-ம் குறைந்துள்ளது. அதாவது, 3 நாள்களில் 1 கிராம் 350-ம், 1 சவரன் ₹2,800-ம் வீழ்ச்சியடைந்துள்ளது.

Similar News

News November 28, 2025

பலதார மணம் செய்தால் 10 ஆண்டு சிறை!

image

அசாமில் ஆண்கள் பலதார மணம் செய்வதை தடுக்க பலதார மண தடை சட்டம் இயற்றப்பட்டுள்ளது. முதல் திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணம் செய்தால் குறைந்தபட்ச தண்டனையாக 7 ஆண்டு சிறை தண்டனை முதல் அதிகபட்சமாக 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் சட்டத்தை அசாம் அரசு இயற்றியுள்ளது. இந்த சட்டம் பெண்களை பாதுகாக்கும் என்றும், பலதார மணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைக்க உதவும் எனவும் அசாம் CM தெரிவித்துள்ளார்.

News November 28, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶நவம்பர் 28, கார்த்திகை 12 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:00 AM – 10:30 AM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:30 AM ▶திதி: அஷ்டமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: பூசம் ▶சிறப்பு: மைதுலாஷ்டமி. ▶வழிபாடு: பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபடுதல்.

News November 28, 2025

தனுஷுடன் மோதும் TTF.. ஒரேநாளில் 10 படங்கள்

image

வார இறுதியையொட்டி தமிழில் மட்டும் நாளை(நவ.28) 10 திரைப்படங்கள் வெளியாகின்றன. தனுஷின் ‘தேரே இஷ்க் மே’, கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா’, யூடியூபர் TTF வாசனின் IPL படங்கள் வெளியாகிறது. இதை தவிர வெள்ளகுதிர, BP 180, Friday உள்ளிட்ட படங்களும் திரைக்கு வருகின்றன. மேலும், அஜித்தின் ‘அட்டகாசம்’, சூர்யாவின் ‘அஞ்சான்’ படங்கள் ரீ ரிலீஸ் ஆகின்றன.

error: Content is protected !!