News June 17, 2024

திருநங்கையருக்கு 1% இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்!

image

அரசு வேலைவாய்ப்பில் திருநங்கையருக்கு 1% இட ஒதுக்கீட்டை மேற்கு வங்க அரசு வழங்க வேண்டுமென கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்ற திருநங்கை இட ஒதுக்கீட்டை உறுதிசெய்யக் கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், திருநங்கையரை வேலைவாய்ப்பில் சமமாக நடத்தும் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Similar News

News March 11, 2026

நடிகை த்ரிஷாவின் புதிய POST

image

குந்தவை காஸ்ட்யூமை நாய் அணிந்திருக்கும் போட்டோவை த்ரிஷா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். வேறொருவரின் பதிவை தனது இன்ஸ்டா ஸ்டோரியாக பகிர்ந்துள்ள அவர், அந்த போட்டோவிற்கு ஹார்ட்டின் எமோஜியை வைத்துள்ளார். தன்னை விமர்சித்த பார்த்திபனுக்கு பதிலடியாக இந்த போட்டோவை த்ரிஷா வெளியிட்டுள்ளார் என்றே நெட்டிசன்கள் SM-ல் பேசத் தொடங்கி விட்டனர்.

News March 11, 2026

சிலிண்டர் சிக்கல்.. அரசு ஹாஸ்பிடல்களில் புதிய ஏற்பாடு

image

நாடு முழுக்க சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் அரசு ஹாஸ்பிடல்களுக்கு முக்கிய ஆலோசனைகளை மருத்துவக் கல்வி இயக்குநரகம் வழங்கியுள்ளது. நோயாளிகளுக்கு உணவு வழங்குவது பாதிக்கப்படாமல் இருக்க குறைவான எரிபொருள் தேவைப்படும் உணவுகளை தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவல், ரொட்டி, ஓட்ஸ் போன்ற உணவுகள் நோயாளிகளின் ஃபுட் மெனுவில் அதிகம் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

News March 11, 2026

BREAKING: கேஸ் சிலிண்டர்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

image

தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், கேஸ் விநியோகத்தை சீர்படுத்துவது குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சக்கரபாணி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, கேஸ் சிலிண்டர் விநியோகம், பெட்ரோல் இருப்பு குறித்து குழு அமைக்கப்பட்டு ஆராயப்படும் என அவர் அறிவித்துள்ளார். அதன்பின், தட்டுப்பாடின்றி சிலிண்டர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமாம்.

error: Content is protected !!