News May 7, 2025
1 பவுன் தங்கம் ₹1.10 லட்சமாக அதிகரிக்க வாய்ப்பு

அடுத்தாண்டு அட்சய திருதியைக்கு தங்கம் விலை ஒரு பவுன் ₹1.10 லட்சமாக அதிகரிக்கும் என நகைக் கடை வணிகர்கள் கணித்துள்ளனர். கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளைவிட இந்தாண்டு அட்சய திருதியைக்கு 35% அளவுக்கு ஒரு பவுனின் விலை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டே அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். விலை எவ்வளவு அதிகரித்தாலும் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
Similar News
News December 10, 2025
TN-ல் வாக்குச்சாவடிகள் 75,035 ஆக உயர்வு

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே TN-ல் 68,467 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், தற்போது நடைபெற்று வரும் SIR பணிகளின் ஒரு பகுதியாக, கூடுதலாக 6,568 வாக்குச்சாவடிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், 2,509 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் TN தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
News December 10, 2025
‘கைதி 2’ டிராப் ஆனதா?

LCU யுனிவர்ஸில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த படம் ‘கைதி 2’. கூலி-க்கு பிறகு ‘கைதி 2’ பணிகளை லோகேஷ் தொடங்குவார் என கூறப்பட்டது. ஆனால் அவர், டோலிவுட் பக்கம் கவனத்தை திருப்பி அல்லு அர்ஜுன், பிரபாஸிடம் கதை சொல்லியுள்ளார். இந்நிலையில் கார்த்தியிடம் ‘கைதி 2’ அப்டேட் கேட்கப்பட்டது. அவரோ, அதைப்பற்றி தனக்கு எந்த ஐடியாவும் இல்லை என கூறியுள்ளார். இதனால் படம் டிராப் ஆகிவிட்டதா என்ற கேள்வி எழுகிறது.
News December 10, 2025
தமிழகம் முழுவதும் முடங்கும்.. அறிவிப்பு வெளியானது

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச.12-ல் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக டிட்டோஜாக் அமைப்பு அறிவித்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் அரசு அலுவல் பணிகளில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில், இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தலைமைச் செயலாளர் எச்சரித்துள்ளார்.


