News February 9, 2025
10 லட்சம் கிலோ தங்கம்.. சீனாவுக்கு கிடைத்த ஜாக்பாட்!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739067173733_1241-normal-WIFI.webp)
சீனாவின் வாங்கூ சுரங்கத்தில் ₹7 லட்சம் கோடி மதிப்பிலான 10 லட்சம் கிலோ தங்க துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்ப முறையில் 10,000 அடி வரை சுரங்கம் தோண்டியதில் எதிர்பார்த்ததை விட பெரிய பொக்கிஷம் கிடைத்துள்ளது. இதன் வாயிலாக உலகளாவிய தங்க சுரங்க சந்தையில், ஹுனான் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ஏற்கனவே பொருளாதார வளர்ச்சியில் வேகமெடுக்கும் சீனாவுக்கு இது கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது.
Similar News
News February 10, 2025
பேட்டிங்கை ரசித்தேன்: ரோஹித் நெகிழ்ச்சி
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739145644561_785-normal-WIFI.webp)
Engக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அணிக்காக நின்றது மகிழ்ச்சி அளித்ததாக ரோஹித் ஷர்மா நெகிழ்ந்துள்ளார். தனது பேட்டிங்கை ரசித்ததாக கூறிய அவர், பேட்டிங் செய்ய வெளியே வந்ததும் முடிந்தவரை அதிக ரன்கள் எடுக்க முடிவு செய்ததாகவும், தனது உடலை குறிவைத்து வீசப்பட்ட பந்துகளில் சரியான திட்டங்களை செயல்படுத்தியதாகவும் பகிர்ந்தார். அத்துடன், கில் மிகவும் உன்னதமான வீரர் என்றும் பாராட்டினார்.
News February 10, 2025
போருக்கு முற்றுப்புள்ளி? புடினுடன் டிரம்ப் பேச்சு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1737388407754_1173-normal-WIFI.webp)
உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ரஷ்ய அதிபர் புடினுடன் பேசியதாக USA அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். போரில் உயிர் பலி ஏற்படுவதை தான் விரும்பவில்லை என புடின் பகிர்ந்ததாகவும் தெரிவித்தார். போரில் லட்சக்கணக்கான மக்கள், குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் நம் குழந்தைகள் போன்றவர்கள். இதற்கு மேலும் உயிர் பலி நிகழ்வதை புடின் தடுத்து நிறுத்துவார் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News February 10, 2025
ரேஷன் கடைகளில் வருகிறது நவீன தராசு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1735810493076_1204-normal-WIFI.webp)
ரேஷன் கடைகளில் விரைவில் புதிய வகை தராசுகள் பயன்படுத்தப்பட உள்ளன. புளூடூத் (அ) USB கேபிளை பாயின்ட் ஆப் சேல் கருவியுடன் இணைத்து பயன்படுத்தும் வகையிலான புதிய எலக்ட்ரானிக் தராசுகள், அளவைக்கு பயன்படுத்தப்பட உள்ளன. அளவையாளர், தராசில் எவ்வளவு எடைக்கு பொருள் வைக்கிறாரோ அந்த எடையளவு உடனுக்குடன் ரசீதாக வழங்கப்படும். இதனால், ரேஷன் பொருட்களை எடை குறைவாக வினியோகிப்பது போன்ற முறைகேடுகள் தடுக்கப்படும்.