News February 25, 2025
காலை 1 கிளாஸ் கற்றாழை ஜூஸ்; இவ்வளவு நன்மைகளா..?

*காற்றாழையில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படும் *சிறிதளவு எலுமிச்சை சாறை கற்றாழை ஜூஸில் கலந்து குடித்தால், எடை இழப்புக்கு பெரிதும் உதவுமாம் *கற்றாழை சாறுடன் நெல்லிக்காயும் சேர்த்து அரைத்து குடித்து வந்தால் முடி ஆரோக்கியமாகவும், வலுவாகவும் மாறும் *வாய் புண்கள் விரட்ட, கற்றாழை ஜூஸில் இருக்கும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உதவும்.
Similar News
News February 25, 2025
காயமடைந்த ரோஹித், ஷமி..? ஸ்ரேயாஸ் ஐயர் ஸ்டேட்மெண்ட்

இந்திய அணி எளிதில் பாகிஸ்தானை வீழ்த்தினாலும் போட்டியின் போது ரோஹித், <<15555464>>ஷமி<<>> ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. ஷமி மைதானத்திலேயே துடித்த நிலையில், ஃபீல்டிங்கில் இருந்து ரோஹித் சிறுது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டார். இது குறித்து போஸ்ட் மேட்ச் பிரசன்டேஷனில் போது பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், ‘நான் இருவரிடமும் பேசினேன். அவர்களுக்கு பெரிய காயங்கள் எதுவும் இல்லை’ என தெரிவித்தார்.
News February 25, 2025
உங்கள் பெயரில் போலி சிம் இருப்பதை அறிவது எப்படி?

* முதலில் https://sancharsaathi.gov.in/ பக்கத்துக்குச் செல்லவும் *‘Useful Links’ஐ கிளிக் செய்யவும் *அதில், ‘Know Mobile Connections in Your Name’ஐ கிளிக் செய்யவும் *நீங்கள் பயன்படுத்தும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண், Captchaவை கொடுத்தால், OTP வரும். அதனை கொடுத்தால், உங்கள் பெயரில் இருக்கும் எண்கள் காட்டும் *அங்கு சரிபார்த்து, எந்த நம்பர் உங்களுடையது இல்லையோ அதை ரிப்போர்டும் செய்யலாம்.
News February 25, 2025
பெயர் பலகையில் கருப்பு வண்ணம் பூசினால் 6 மாத சிறை

பெயர் பலகையில் கருப்பு வண்ணம் பூசினால் 6 மாத சிறை அளிக்கப்படும் என்று ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் ரயில்நிலைய பெயர் பலகையில் இருந்த ஹிந்தி வாசகத்தை திமுகவினர் அழித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், ரயில்வே சொத்து சட்டப்படி, இதுபோன்ற செயலில் ஈடுபடுவோரை 6 மாத சிறையில் அடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.