News September 12, 2024
1 கோடி மோசடி மொபைல் இணைப்புகள் துண்டிப்பு

ஒரு கோடி மோசடி மொபைல் இணைப்புகள் இதுவரை துண்டிக்கப்பட்டு உள்ளதாக தொலை தொடர்புத்துறை தெரிவித்துள்ளது. SANCHAR SAATHI தளத்தில் மக்கள் அளிக்கும் புகார் அடிப்படையில் மோசடி இணைப்புகளை தொலைத்தொடர்புத்துறை துண்டித்தும், முடக்கியும் வருகிறது. அதன்படி, ஒரு கோடிக்கும் மேற்பட்ட இணைப்புகளை துண்டித்துள்ளது. மேலும், 2.27 லட்சம் மொபைல்களையும் முடக்கி உள்ளது. உங்கள் மொபைல் இணைப்பு வேலை செய்கிறதா? கமெண்ட்
Similar News
News November 23, 2025
தைவானை தாக்க தயாராகும் சீனா

சிவிலியன் கப்பல்களை பயன்படுத்தி தைவானை தாக்க சீனா தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ பயிற்சிக்காக சீனா சிவிலியன் கப்பல்களை பயன்படுத்துவது இந்த செய்தியை உறுதிப்படுத்துவதாக உள்ளது. மேலும், தைவான் மீது சைபர் தாக்குதல்கள் மூலமாக பொருளாதார அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளதுடன், போர் ஒத்திகையையும் சீனா தீவிரப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

குழந்தைத்தனமாக செயல்படும் மாதம்பட்டி: ஜாய் கிரிசில்டா

தன்னை வீழ்த்துவதற்காக மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு கூட்டணியை உருவாக்கி வேலை செய்வதாக ஜாய் கிரிசில்டா குற்றஞ்சாட்டியுள்ளார். தன்னுடைய செல்போன் எண்ணை பலரிடம் கொடுத்து மெசெஜ் அனுப்ப சொல்லுவதாகவும், இதுபோன்ற குழந்தைத்தனமான செயல்களில் மாதம்பட்டி ஈடுபடுவார் என தான் நினைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். உங்களுடைய பணம் பத்தும் செய்யும், ஆனால் உண்மையை ஒருபோதும் புதைக்க இயலாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.