News March 28, 2025
45 நிமிடத்திற்கு 1 குழந்தை பலி… கலங்கி நிற்கும் காசா

அழுவதற்கு கூட காசா மக்களின் கண்களில் கண்ணீர் இருக்குமா என தெரியவில்லை. அங்கு ஒவ்வொரு 45 நிமிடத்திற்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. போர் தொடங்கி 535 நாட்களில் ஒரு நாளைக்கு 30 குழந்தைகள் வீதம் 17,400 குழந்தைகளை இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்திருக்கிறது. அதில், ஒரு வயதைக் கூட கடக்காத 825 பிஞ்சுக் குழந்தைகளும் மரணித்து இருப்பது சோகத்திலும் பெரும் சோகம்.
Similar News
News October 29, 2025
SK பட இயக்குநருடன் இணையும் சூரி

நடிகர் சூரி அடுத்தடுத்து புதிய படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில், ‘நேற்று இன்று நாளை’, ‘அயலான்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளார். இப்படத்தை AGS நிறுவனம் தயாரிக்கிறது. சூரி தற்போது ‘மண்டாடி’ படத்தில் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் ‘செல்ஃபி’ படத்தை இயக்கிய மதிமாறன் புகழேந்தி தான் இப்படத்தை இயக்கி வருகிறார்.
News October 29, 2025
ஸ்டீபன் ஹாக்கிங் பொன்மொழிகள்

*மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனே புத்திக்கூர்மை.
*நாம் வேடிக்கையானவர்களாக இல்லாவிட்டால் வாழ்க்கை நரகமாகிவிடும்.
*நீங்கள் எப்போதும் கோபமாக புகார் கூறிக் கொண்டே இருந்தால், உங்களை மக்கள் புறக்கணிப்பார்கள்.
*‘அறியாமை’ என்பது அறிவாற்றலின் மிகப்பெரிய எதிரியல்ல, அது அறிவின் மாயையே ஆகும்.
*யார் விதியும் இங்கு எழுதப்படவில்லை.
News October 29, 2025
தோல்வி பயத்தில் CM ஸ்டாலின்: நயினார்

தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தில் SIR குறித்து மடைமாற்றும் வேலையில CM ஸ்டாலின் ஈடுபட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். முதலில் CAA, அடுத்து பண மதிப்பிழப்பு நடவடிக்கை, தற்போது SIR என முன்னுக்கு பின்னாக மாறிமாறி பேசுவதாகவும் சாடியுள்ளார். SIR-ஐ எதிர்த்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தை நாளை நடத்தப்போவதாக CM அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


