News April 27, 2025
32,438 பணியிடங்களுக்கு 1.8 கோடி பேர் விண்ணப்பம்!

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 32,438 Group-D பணியிடங்களுக்கு 1.8 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால், 1 பணியிடத்திற்கு 3,329 பேர் மல்லுகட்டுகின்றனர். இது, நாட்டின் வேலைவாய்ப்பின்மையின் அவலம் என எதிர்க்கட்சியினரும், அரசு வேலையின் மீதுள்ள மோகம் என ஒரு தரப்பினரும் விமர்சிக்கின்றனர். எது எப்படியோ மே (அ) ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள தேர்வுக்குத் தேர்வர்கள் சிறப்பாக தயாராகுங்கள். ALL THE BEST..
Similar News
News November 23, 2025
10 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிச.1-ம் தேதி முதல் டிச.19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 10 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக அணுசக்தி மசோதா 2025 தாக்கல் செய்யப்படுகிறது. இதைத்தவிர உயர்கல்வி கமிஷன் மசோதா, தேசிய நெடுஞ்சாலைகள் திருத்த மசோதா, கார்பரேட் சட்டங்கள் திருத்த மசோதா உள்ளிட்டவையும் பட்டியலிடப்பட்டு உள்ளது.
News November 23, 2025
உரிமைகளை தாரைவார்க்க தயாரான திமுக: அன்புமணி

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியுள்ளது கவலையளிக்கிறதாக அன்புமணி தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில் திமுக அரசு வழக்கம் போலவே அமைதி காத்து, உரிமைகளை தாரை வார்க்க தயாராகிக் கொண்டிருக்கிறதாகவும் சாடினார்.
காவிரி பாசன விவசாயிகளின் அச்சத்தை திமுக அரசு உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
News November 23, 2025
வரலாற்றில் இன்று

*1910 – சுவீடனில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
*1956 – அரியலூரில் நடந்த ரயில் விபத்தில் 142 பயணிகள் உயிரிழந்தனர்.
*1980 – இத்தாலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 4,800 பேர் உயிரிழந்தனர்.
*2007 – அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.


