News March 17, 2024
சென்னையில் 1.42 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

சென்னை யானைக்கவுனியில் தனியார் காம்ப்ளெக்ஸில் தங்கியிருந்த யாசர் அராபத், குணா ஜெயின் ஆகியோரிடம் இருந்து ₹1.42 கோடி ஹவாலா பணம் பறிமுதல். இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் நேற்று காலை தண்டையார் பேட்டை காவல்நிலையத்தில் போலிசார் விசாரணை மேற்கொண்டதில் மேலும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நபர் குறித்து கேட்டறிந்தனர்.
Similar News
News October 23, 2025
சென்னையில் வட மாநில இளைஞர்கள் நூதன மோசடி!

சென்னை: ரயில் டிக்கெட் கன்ஃபார்ம் செய்து தருவதாக கூறி நூதன மோசடி செய்த இளைஞர்கள் கைதாகியுள்ளனர். வட மாநில நபர்களிடம் UPI பாஸ்வேர்ட் பெற்று பல லட்சம் மோசடி செய்த பீகாரை சேர்ந்த 2 இளைஞர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைதான இளைஞர்களிடம் இருந்து 18 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
News October 23, 2025
சென்னை: கடற்கரையில் பரவும் வெண் நுரைகள்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூவம் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கூவம் ஆற்றில் தேங்கிக் கிடந்த ரசாயன கழிவுகளும், ஆகாய தாமரையும் அடித்துச் செல்லப்பட்டு பட்டினப்பாக்கம் அருகே கடலில் கலந்து வருகின்றன. இதனால் மலைபோல் வெண் நுரைகள் உருவாகி பட்டினப்பாக்கம் முதல் சீனிவாசபுரம் வரை கடற்கரையோரம் படர்ந்துள்ளது.
News October 23, 2025
சென்னை: கனமழை களப்பணியில் 22 ஆயிரம் பேர்

சென்னையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு மையத்திற்கு(1913) மக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பருவமழையை முன்னிட்டு, பொறியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்பட 22 ஆயிரம் பேரும் சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் 2,149 பேரும் களப் பணியாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.