News March 23, 2025
3 மாதங்களில் 1.24 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள்!

TNல் தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தச் சூழலில், கடந்த 3 மாதங்களில் மட்டும் 1.24 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் 4 பேர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். எனவே, தெருவில் நடக்கும்போது எச்சரிக்கையாக இருங்கள் மக்களே!
Similar News
News March 25, 2025
இமாலய இலக்கை எட்டி இறுதியில் மாஸ் காட்டிய டெல்லி

210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் மார்ஷ்(72), பூரன்(75) ஆகியோர் அதிரடி காட்டினர். டெல்லி அணி தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கடினமான இலக்குடன் களமிறங்கிய அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் அஷுதோஸ் சர்மா, நிகம் அதிரடியில் டெல்லி அணி இலக்கை எட்டிப் பிடித்தது.
News March 25, 2025
ட்ரம்ப் Ex மருமகளுடன் காதலில் விழுந்த கோல்ஃப் வீரர்

அமெரிக்காவின் பிரபல கோல்ஃப் வீரரான டைகர் வுட்ஸ்(50), அவரது காதலியை உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் முன்னாள் மருமகளான வனெஸ்ஸாதான் அது. Life is better with you by my side! எனக் குறிப்பிட்டு ஜோடியாக இருக்கும் படத்தை டைகர் வுட்ஸ் வெளியிட்டுள்ளார். டிரம்ப் ஜுனியர் – வனெஸ்ஸா(47) ஜோடி 2018-ல் விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.
News March 25, 2025
ராசி பலன்கள் (25.03.2025)

➤மேஷம் – அன்பு ➤ரிஷபம் – தனம் ➤மிதுனம் – எதிர்ப்பு ➤கடகம் – வெற்றி ➤சிம்மம் – கவலை ➤கன்னி – ஜெயம் ➤துலாம் – ஊக்கம் ➤விருச்சிகம் – அமைதி ➤தனுசு – ஓய்வு ➤மகரம் – மறதி ➤கும்பம் – பரிசு ➤மீனம் – நேசம்.