News April 5, 2024
1.22 கோடி லிட்டர் பீர் பறிமுதல்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பணப்பட்டுவாடா, மது வழங்குவதை பறக்கும் படை மூலம் தேர்தல் ஆணையம் தடுக்கிறது. அந்த வகையில் கர்நாடகாவின் மைசூரு மாவட்டம் சாமராஜ்நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கலால் துறையினர் 98.52 கோடி ரூபாய் மதிப்பிலான 1.22 கோடி லிட்டர் பீரை பறிமுதல் செய்தனர். அத்துடன் 3.35 கோடி ரூபாபையையும் பறிமுதல் செய்தனர். நாட்டிலேயே ஒரே இடத்தில் இவ்வளவு பீர் பாட்டில் பிடிப்பட்டது இதுவே முதல்முறை.
Similar News
News January 17, 2026
₹3 லட்சம் மெஷினுடன் வந்த சுப்மன் கில்: குடிநீர் பீதியா?

இந்தியா-நியூசிலாந்து தொடரின் இறுதிப்போட்டி இந்தூரில் நடக்கவுள்ளது. இந்நிலையில், கேப்டன் சுப்மன் கில், ₹3 லட்சம் மதிப்புள்ள அதிநவீன வாட்டர் பியூரிஃபையரை தனது ஹோட்டல் அறைக்கே கொண்டு வந்துள்ளாராம். பாட்டில் நீரையே மீண்டும் சுத்திகரித்து குடிக்கிறாராம். இது, இந்தூரில் குடிநீர் மாசு பிரச்னையால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கையா அல்லது அவரது தனிப்பட்ட பாதுகாப்பு நடைமுறையா என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது.
News January 17, 2026
அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு..

TN-ல் 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்கள் மாதந்தோறும் ரேஷன் பொருள்களை பெற்று வருகின்றனர். இந்த மாதம் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி, பொங்கல் விடுமுறையால், மாத ரேஷன் பொருள்கள் வழங்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டது. குடியரசு தினத்தை ஒட்டியும் 2 நாள்கள் விடுமுறை வருகிறது. எனவே, பிப்ரவரியில், ஜனவரி மாத பொருளையும் சேர்த்து வழங்க மக்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில், அரசு இதை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
News January 17, 2026
தேர்தல் வாக்குறுதி: திமுகவை முந்திக் கொண்ட அதிமுக

திமுகவை முந்திக் கொண்டு மகளிருக்கு ₹2,000, ஆண்களுக்கு இலவச பஸ் உள்ளிட்ட வாக்குறுதிகளை <<18879658>>அதிமுக <<>>கொடுத்துள்ளது. இதுபோன்ற பல அறிவிப்புகள் இனி வெளியாக வாய்ப்பு இருப்பதால், திமுகவுக்கு நெருக்கடியாக மாறியிருக்கிறது. அதுமட்டுமல்ல, திமுகவும் அதிமுகவை விட சிறப்பான தேர்தல் அறிக்கை கொடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால், தேர்தலில் திமுக, அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் பிரதானமாக எதிரொலிக்க வாய்ப்புள்ளது.


