News June 2, 2024
ஃபேஸ்புக்கில் இருந்து 1.16 கோடி பதிவுகள் நீக்கம்

மெட்டா நிறுவனம், இந்தியாவில் ஆட்சேபனைக்குரிய 1.7 கோடி பதிவுகளை ஏப்ரல் மாதம் நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. நிறுவன விதிகளின் அடிப்படையில், 1.16 கோடி மோசமான பதிவுகள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் இருந்தும், 54 லட்சம் மோசமான பதிவுகள் இன்ஸ்டாகிராமில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளன. மேலும், பயனாளர்களின் 17,124 குறைகளில், 9,977 குறைகளை சரி செய்துள்ளதாகவும் மெட்டா அறிவித்துள்ளது.
Similar News
News September 10, 2025
RECIPE: உடல் கொழுப்பை கரைக்கும் சிறுதானிய இட்லி!

இதய ஆரோக்கியம் மேம்பட, உடல் கொழுப்பு குறைய தினை இட்லி உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
*தினையை அரிசியுடன் சேர்த்து நன்கு கழுவி, 2 மணிநேரம் ஊற வைக்கவும். *இவற்றுடன் உளுந்தம் பருப்பையும் வெந்தயத்தையும் சேர்த்து, இட்லி பதத்திற்கு மென்மையாக அரைக்கவும்.
*உப்பு சேர்த்து 6 மணிநேரம் வரை புளிக்க வைக்கவும். இந்த மாவை இட்லி தட்டுகளில் ஊற்றி எடுத்தால், சுட சுட சத்தான தினை இட்லி ரெடி. Share it.
News September 10, 2025
குல்காமில் 2 பயங்கரவாதிகள் என்கவுண்டர்

ஜம்மு & காஷ்மீரின் குல்காமில், நேற்று ஆபரேஷன் குடரின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 லக்ஷர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் பாக்.,ஐ சேர்ந்த ரஹ்மான், மற்றொருவர் காஷ்மீரின் தரம்தோராவை சேர்ந்த அமீர் அஹ்மத் தர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்னதாக, இந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
News September 10, 2025
கவலையாலேயே பழனியில் மொட்டை போட்டேன்: ARM

‘மதராஸி’ படம் வெற்றி பெற வேண்டியே பழனியில் மொட்டையடித்ததாக AR முருகதாஸ் தெரிவித்துள்ளார். முன்பு எனது முதல் படமான ‘தீனா’ வெற்றி பெற பிரார்த்தித்ததாக கூறிய அவர், இப்படமும் தனது முதல் படம் போன்று தான் என்றார். ஏனென்றால், கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு நான் எழுதிய 2 படங்களை என்னால் எடுக்க முடியவில்லை என வருத்தமடைந்தார். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார், சிக்கந்தர் ஆகியவை தோல்வியை சந்தித்தன.