News June 4, 2024

1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல்

image

கேரளாவில் வயநாடு தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல்காந்தி முன்னிலை வகித்து வருகிறார். அங்கு அவரை எதிர்த்து களம் கண்ட சிபிஐ வேட்பாளர் ஆனி ராஜா தொடக்கம் முதலை கடும் பின்னடைவை சந்தித்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி, ராகுல் 2,08,904 வாக்குகள் பெற்றுள்ளார்.

Similar News

News September 21, 2025

கோடிக்கணக்கான குடும்பங்களில் மகிழ்ச்சி: மோடி

image

நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி சீர்திருத்தம் நவராத்திரியின் முதல் நாளான நாளை முதல் அமலுக்கு வருவதாக குறிப்பிட்டார். இதன்மூலம், கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு மகிழ்ச்சி என்றும் அவர்களது சேமிப்பு அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார். பெண்கள், விவசாயிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் பயனடைய இருப்பதாகவும் மோடி கூறினார்.

News September 21, 2025

18 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்

image

பல மாவட்டங்களில் தற்போது மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இரவு 7 மணி வரை தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், தி.மலை, காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசியில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

News September 21, 2025

HEALTH TIPS: இந்த உணவுகளை தவிர்க்க வேண்டாம்!

image

மூளையின் செயல்பாடு, ஆரோக்கியமான நரம்பு மண்டலத்திற்கு அன்றாடம் போதுமான அளவு வைட்டமின் பி12 எடுத்துக்கொள்ள வேண்டும். மீன், முட்டை, இறைச்சியில் இந்த சத்து அதிகளவு கிடைக்கிறது. உடலில் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட்டால் பால், யோகர்ட், சீஸ், மோர், பனீர் ஆகியவற்றை உணவுமுறையில் சேர்ப்பது அவசியம். பால், யோகர்ட் சாப்பிடாதவர்கள் பாதாம், சோயா, ஓட்ஸ், டோஃபு போன்றவற்றை சாப்பிட்டு பி12 சத்து பெறலாம். SHARE IT.

error: Content is protected !!